Category Archives: Uncategorized

பிப்ரவரி: 17 புனித மரியாயின் ஊழியர் சபை நிறுவியவர்கள்

புனித மரியாயின் ஊழியர் சபை நிறுவியவர்கள்
(கி.பி.13ம் நூற்றாண்டு)

இந்த எழுவரில் இருவர் திருமணமானவர். இருவர் விதவையர். மூவர் திருமணமாகாதவர். இவர்கள் எல்லாரும் தங்கள் நாடான இத்தாலியில் பிளாரன்ஸ் நகரில் தனிமையான இடத்தில் ஒன்று கூடினர். தங்களின் உடமைகள் யாவற்றையும் துறந்து விட்டு செப தவ வாழ்வை மேற்கொள்ள முடிவு செய்தனர் என்றால் வியப்பாக இல்லையா? 1233ல் முழுவீச்சில் உலகை துறந்தனர் இந்த அபூர்வ சகோதரர்கள் . பிளாரன்ஸ் நகர ஆயரின் வேண்டுகோளின் படி தங்கெளுக்கென சபை ஒழுங்குகளை அமைத்துக் கொண்டனர். நாளடைவில் வேறு பலரையும் இந்தச் சபையில் சேர்த்தனர். இவர்கள் மரியாயின் ஊழியர்கள்; என்றே அன்றும் இன்றும் அழைக்கப்படுகின்றனர். புனித டோமினிக் சபையினரின் உடையைப் போல் ஆனால் கறுப்பு நிறத்தில் அணிந்து கொண்டனர். இந்த சபையைச் சேர்ந்த கன்னியர்களும் நாளடைவில் பல மடங்களை நிறுவியுள்ளார்கள். 3ம் சபையினரும் உண்டு. 16வது நூற்றாண்டு முதல் வியாகுல அன்னைக்கு சிறப்பான வணக்கம் காட்டுவதுதான் இந்தச் சபையின் தனிச் சிறப்பு.

ஆலயத் திறப்பு , அர்ச்சிப்பு விழா

நானாட்டான் பங்கு தூய மரியா ( தூய அடைக்கல அன்னை )ஆலயத் திறப்பு , அர்ச்சிப்பு விழா Nanattan Parish St. Mary’s ( Our Lady of Good Health) Opening and Consecration 05/02/2018

நள்ளிரவுத் திருப்பலி, மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில்

கிறிஸ்து பிறப்புப் பெருவிழா நள்ளிரவுத் திருப்பலி, மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் 24ந் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு இடம் பெற்றது. மன்னார் பேராலயப் பங்குப் பணியாளர் அருட்பணி.ச.ஜொ.பெப்பி சோசை அடிகளாரின் வழிநடாத்துதலோடு மன்னார் மறைமாவட்டத்திற்கான திருத்தூதரக நிர்வாகி பேரருட்கலாநிதி ஜோசவ் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

மேலும் அறிய நள்ளிரவுத் திருப்பலி, மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில்

புனித ஸ்தனிஸ்லாஸ் கோஸ்கா, சே.ச

புனித ஸ்தனிஸ்லாஸ் கோஸ்கா, சே.ச

இளந்துறவி – (கி.பி. 1550 – 1568)

இவர் போலாந்து நாட்டில் ராஸ்கோவ் என்ற நகரில் உயர்குலத்தில் தோன்றியவர். 1564 ஆம் ஆண்டு தம் சகோதரருடன் கல்வி கற்க வியன்னாவுக்கு அனுப்பப் பட்டார். சென்ற இடத்தில் ஒரு புராட்டஸ்டன்ட் வீட்டில் குடியிருந்தனர். ஒரு முறை இவர் கடும் காய்ச்சலால் படுத்த படுக்கையாகிவிட்டார். அந்நிலையில் தம் அண்ண னிடம் தமக்குத் திவ்விய நன்மைதர ஒரு குருவானவரை அழைத்து வருமாறு கேட்டார். பலமுறை கேட்டும் பயனில்லை. அண்ணன் எரிச்சலுடன் இவரைத் தடியால் அடித்துவிட்டு ஓடிவிட்டான்.

இந்நிலையில் புனிதர் நற்சாவுக்குப் பாதுகாவலியான புனித பார்பராவிடம் உருக்கமாக வேண்டினார். அவரது வேண்டுதல் கேட்கப்பட்டது. ஒரு நள்ளிரவு, இருள் படர்ந்திருந்த இவரது அறையில் எதிர்பாராமல் ஓர் ஒளி தோன்றியது. பார்பராவும், 2 வானதூதர்களும் தோன்றி னர். அந்த வானதூதர்களில் ஒருவர் கையில் திவ்விய நற்கருணையை ஏந்தி நின்றார். புனிதர் முழங்கால் இடடு அதனைப் பக்தியுடன் பெற்றுக்கொண்டார். உடனே நோய் நீங்கி நலமடைந்தார்.

இன்னொரு நாளும் ஒரு புதுமை நிகழ்ந்தது. மீண்டும் இவரது அறையில் ஓர் ஒளி தோன்றியது. உடனே மரியன்னை குழந்தை இயேசுவுடன் தோன்றினார். புன்முறுவலுடன் மரியன்னை சற்றே குனிந்து ஸ்தனிஸ் லாசிடம் தம் மகனைக் கொடுத்தார். தேவபாலனும் தம் கைகளால் புனிதரைத் தழுவினார். இந்த நேரத்தில் மரியன்னை புனிதரைப் புதிதாகத் தோன்றிய இயேசு சபையில் சேருமாறு கூறிவிட்டு மறைந்தார்.

தந்தையோ இதற்கு உடன்படவில்லை. எனவே புனிதர் தம் 17 வயதில் சாக்குத் துணியைத் தம்மீது போட்டுக் கொண்டு கால்நடையாக உரோமை நோக்கிப் புறப்பட் டார். முதலில் ஜெர்மணியை அடைந்து பீற்றர் கனிசியுசி டம் தம்மைச் சபையில் சேர்க்க வேண்டுமெனக் கேட்டார். ஆனால் சூழ்நிலையின் காரணமாக உரோமை செல்வதே மேல் என்று கனிசியுஸ் சொல்லிவிட்டார். அதனால் மேலும் 800 கல் தொலைவு நடந்து உரோமையை அடைந்தார். அங்கே பிரான்சிஸ் போர்ஜியா இவரைச் சபையில் சேர்த்துக்கொண்டார். 9 மாதங்களே இவர் இளந்துறவுநிலையில் இருந்தார். அதற்குள் நோயினால் தாக்கப்பட்டார்.

இவர் மரியன்னையிடம் ஆழ்ந்த பக்தி கொண்டு இருந்த வர். தம் இறப்பு அண்மையிலிருப்பதை உணர்ந்தார். அன்னையின் விண்ணேற்புப் பெருவிழாவன்று, தம் இறக்கப்போவதாகக் கூறிவந்தார். ஆகஸ்டு 14ம் நாள் நள்ளிரவில் அவரின் முகம் ஒளிர்ந்தது. அருகிலிருந்த ஒருவரிடம் “மரியன்னை கன்னியர் பலருடன் என்னை விண்ணகம் எடுத்துச் செல்ல வந்திருக்கின்றார்” என்று சொல்லிப் புன்முறுவலுடன் தம் ஆன்மாவை இறைவ னிடம் கையளித்தார்.

 

புனித ஜோசப்பாத்

புனித ஜோசப்பாத்

ஆயர், மறைசாட்சி – (கி.பி. 1580 – 1623)

கிறிஸ்தவர்கள் கிறிஸ்தவர்களையே அழித்துக்கொள் ளும் கொடுமையைக் கேட்டிருக்கிறீர்களா? மூளை சிதற அடித்து இந்தப் புனிதரைக் கொன்றவர்கள் கிறிஸ்தவர் கள்தாம்.

கி.பி 1967ல் திருத்தந்தை 6-ஆம் சின்னப்பர் கிழக்கித்திய திருச்சபையின் பிதாப்பிதாவாகிய முதல் அத்தன கோரசைக் கட்டித் தழுவினார். ஒருவர் ஒருவருக்கு அமைதியின் முத்தம் அளித்தனர். பிரிவினை என்னும் வடு நீங்கிவிட்டதாக இது காட்டுகிறதென்று உலகிற்கு அறிவித்தனர். பிரிவினை இன்று நீங்கிவிட்டது.

ஜோசபாத், உக்ரெய்ன் நாட்டின் பிறந்தவர். பாசில் சபையில் சேர்ந்து பிறகு குருவானார். விரைவில் இவர் சிறந்த மறைபோதகர் என்ற புகழ் பெற்றார். தொடக்கத் திலேயே இவர் ஒரு பெரிய சிக்கலைச் சமாளித்தார். பிரிவினைச் சபையாருடன் நெருங்கிய நட்பு கொண்டி ருந்தார்.

அவர்களில் சிலர் இதனால் இவரை ஜயுற்றனர். “திருவழி பாட்டு முறைகளிலும் மற்ற சட்டதிட்டங்களிலும் இவர் ஓடுருவுகிறார். நாளடைவில் உரோமன் கத்தோலிக்கரு டன் நம்மை ஒன்றாக்கி விடுவார்” என்று அஞ்சினர். உண்மையில் இவர் தமது திறமையினால் பிரிவினை சபைச் சகோதரர் பலரையும் ஒரே மந்தையில் கொண்டு வந்து சேர்த்தார். ஆனால் “ஸ்லாவோனிக்” என்று அழைக் கப்படும் அவர்களின் வழிபாட்டு முறைகளைப் பெரிதும் பாராட்டினார்: ஆதரித்தார். ஆனால் அதனை அழிக்க முயன்றார் என்பது இவருடைய பகைவர்களின் பெரியதொரு குற்றச்சாட்டு.

விரைவில் பிரிவினை  சபையின் ஆட்சிப் பீடத்தில் பெரியதொரு மாற்றம் ஏற்பட்டது. “இவர் இலத்தீன் கிறிஸ்தவர்களாக மாற்ற முயலுகிறார்” என்று இவர் மீது குற்றஞ்சாட்டினர். அப்போதிருந்தபோலந்து நாட்டு ஆயர் கள் இவருக்குப் போதிய ஆதரவு அளிக்கவில்லை. தமது மறைமாநிலமாகிய போலோக்குக்குப் போகக் கூடாது என்று இவரைத் தடுத்தனர். ஆனால் இவர் துணிச்சலுடன் சென்றார். ஒரு பிரிவினை சபைக் குருஇவரை இழிவாகத் திட்டியபடியே இவரை அப்புறப்படுத்தினார். இதற்குள் பிரிவினைச் சபையார் ஒன்றுகூடி ஆயரின் இல்லத்தி னுள் புகுந்தனர். மூளை சிதறுமாறு அடித்து இவரின் தலையைப் பிளந்தனர். இறுதியில் சுட்டனர். இவரது உடலை ஆற்றில் எறிந்தனர். கிழக்கத்திய திருச்சபையின் முதல் புனிதர் இவர்.

புனித மார்ட்டின்

புனித மார்ட்டின்

ரூர்ஸ் நகரின் ஆயர் – (கி.பி. 397)

இவர் பன்னோனியா நாட்டில் சபேரியா நகரில் பிறந்தவர். இவரின் பெற்றோர் கிறிஸ்துவின் அறியாதவர்கள். தந்தை படை அலுவலர் பணியின் பொருட்டு இத்தாலி யில் பாவியா நகருக்குக் குடும்பத்தினருடன் செல்ல வேண்டியதாயிற்று. 15 வயதில் மார்ட்டின் கட்டாயமாகப் படையில் சேர்க்கப்பட்டார். இன்னும் கிறிஸ்துவின் ஒளி பெறவில்லை. இருந்தாலும் ஒரு கிறிஸ்தவத் துறவி போல் வாழ்ந்து வந்தார். ஏமியன்ஸ் நகரில் இவர் வாழ்ந்த ஒரு நாள் கடுங்குளிர்காலத்தில் நகரின் நுழைவாயிலில் குளிரினால் நடுங்கி அரைநிர்வாணமாகப் பிச்சைக் கேட்டுக்கொண்டிருந்த ஏழை ஒருவரைச் சந்தித்தார். தமது போர்வையை இரண்டாகக் கிழித்து ஒரு பகுதியை அந்த ஏழையின் மீது போர்த்தினார். மறுபாதியைத் தமக்கு வைத்துக்கொண்டார். அதே நாள் இரவு இயேசு, மார்ட்டினுக்குத் தோன்றினார். “மார்ட்டின், இந்தப் போர்வையினால் என்னை நீ போர்த்தினாய்” என்ற சொற்களைக் அவர் கேட்க முடிந்தது.

இந்நிகழ்வுக்குப் பிறகு மார்ட்டின் திருமுழுக்குப் பெறுவதற்கு ஓட்டம் எடுத்தாராம். இவர் இன்னும் படையை விட்டு விலகவில்லை. இவருக்கு 22வயது ஆனபோது பிரான்சைச் சூறையாட அரக்கர் கூட்டம் வந்தது. மார்ட்டின் படையிலிருந்து விடுதலை அடைந்தார். பின்னர் புனித இலாரியர் ஆயராகப் பணியாற்றிய பாய்ட்டியர்ஸ் நகரை அடைந்தார். அவரின் சீடரானார்.

இச்சூழலில் மார்ட்டினுக்குத் தோன்றிய கனவில் அடிப்படையில் சொந்த ஊரான பன்னோனியா சென்று தம் தந்தை தவிர மற்ற அனைவருக்கும் திருமுழுக்கு அளித்தார். சென்ற இடத்தில் ஆரியப்பதிதரின் தப்பறையைக் கடுமையாகச் சுட்டிக் காட்டியதால், பிறகு புனித இலாரியர் தானமாக அளித்த ஓர் இடத்தில் தனிமையில் நாள்களைக் கழித்தார். விரைவில் தவ முனிவர் பலர் அவரிடம் வந்து சேர்ந்துவிட்டனர். கிபி. 1607 வரை இந்தத் துறவு மடம் பெரிதாகப் பெருகிக் கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது. 10 ஆண்டுகள் மார்ட்டின் இங்கு வாழ்ந்து, உடன் துறவிகளுக்கு ஆன்மீக வழிகாட்டியாக அமைந்ததோடு, அருகிலிருந்த இடங்களு க்குச் சென்று மறைபரப்புப் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டார்.

மக்கள் இதுவரை ஆயராக்க முயன்றபோது, தட்டிக் கழித்து விட்டார். இதனால் வேறு ஒ ருவழியை மக்கள் மேற்கொண்டனர். “நோயாளி ஒருவரைச் சந்திக்க உடனே வாருங்கள்” என்று அழைப்பு விடுத்தனர். ஏற்கெனவே ஆலயத்தில் மார்ட்டினைத் திருநிலைப்படுத்த ஆயர்குழு காத்திருந்தது. அவரை மக்கள் ஆலயத்திற்கு அழைத்துச் சென்றபோது, இவரின் ஏழ்மையின் கோலத்தைப் பார்த்து, ஆயர்கள் திருநிலைப்படுத்த மறுத்தனர். பிறகு மக்களு டையவும் குருகுலத்தினருடையவும் கட்டாயத்தின் பேரிலும் ஆர்ப்பரிப்பின் பேரிலும் ஆயராகத் திருநிலைப் படுத்தினர். நாளடைவில் மார்மூட்டியேர் என்ற துறவு மட்த்தில் அவர் தங்கி வழக்கமான தமது பணியைத் தொடர்ந்தார். இங்கு இவருடன் 80 துறவிகள் சேர்ந்து விட்டனர். இவர்களில் பலர் பிரபு குலத்தவர். இங்கிருந்து கொண்டு அருகிலிருந்த கிளைப்பங்குகள் அத்தனையை யும் காலநடையாகச் சென்று சந்தித்து விசுவாசத்தில் உறுதிப்படுத்தினார். உழைத்துக்களைத்துப் போயிருந்த சூழலில் கி.பி 397 நவம்பர் 8ல் இறைவனடி சேர்ந்தார். அவரது கல்லறை மேல் பேராலயம் ஒன்று எழுப்பப்பட்டு இன்று வரை காட்சி அளிக்கிறது.

புனித பெரிய லியோ

இவர் உரோமையில் பிறந்தவர். உயர்ந்த கல்வி கற்றுக் கொள்ளும் வசதி பெற்றிருந்தார். பாப்பு முதல் செலஸ்டின் காலத்தில் லியோவைத் தியாக்கோனாக முதன் முதலாகச் சந்திக்கின்றோம். புனித சிரில் இவரிடம் நேரடியாகக் கடிதத் தொடர்பு கொண்டிருந்த திலிருந்து, இவரது பெருமை புலனாகிறது. காசியன் என்பவர் நெஸ்டோரியசின் தப்பறையைக் கண்டித்து எழுதிய நூலை லியோவுக்கு அர்ப்பணம் செய்தார். பிரான்சில் ஈற்றியஸ், ஆல்பினுஸ் என்ற பெருந் தலைவர்களின் போராட்டத்தின் போது, அங்கு விரைந்து அவர்களிடம் அமைதியை உண்டுபண்ணச் சென்றிருந் தார். உரோமையில் லியோ இல்லாதபோது, திருச்சபை யின் தலைவராக லியோ தேர்ந்தெடுக்கப்ட்ட அவர் ஆற்றிய 96 மறையுரைகள் இன்றுவரை கலங்கரை விளக்கமாக அமைந்துள்ளன. இம்மறையுரைகளில் பகிர்ந்து வாழ்தல், கிறிஸ்தவ வாழ்வில் சமூக நிதி இவை பற்றி அழுத்தம் கொடுத்திருப்பது நம் கவனத்தை மிகவும் ஈர்க்க வேண்டும். கிறிஸ்துவின் மனிதாவதாரம் பற்றிய தௌ;ளத் தெளிவான போதனைகளும் இவற்றில் அடங்கும்.

கீழைத் திருச்சபையில் இவர் காலத்தில் இருந்த சீர்கேடு கள் இவருக்கு அறைகூவலாக அமைந்தன. கி.பி 448ல் யூட்டிக்கஸ் என்ற மடாதிபரிடமிருந்து வந்த மடலில் நெஸ்டோரியன் தப்பறை மீண்டும் தலைதூக்கி விட்டதைக் குறிப்பிடுகிறார். இந்நிலையில் கொன்ஸ்டா ன்டி நோபில் பிதாப்பிதா புனித ஃப்ளேவியன் என்பவர் யூட்டிகசைத் திருச்சபைக்கப் புறம்பாக்கிவிட்டார். மன்னர் தியோடோசியஸ் இதற்கு உடந்தையாகியிருந்தார். யூட்டிக்கஸ் கிறிஸ்துவிடமுள்ள 2 தம்மை களையும் ஏற்க மறுத்துவிட்டார். இது நெஸ்டோரியசின் தப்பறை க்கு நேர்மாறான தப்பi. எபேசு நகரில் கூடிய கூடிய “திருட்டுப் பேரவை” Rotten Synod புனித ஃபிளேவியனைக் குற்றப்படுத்தி, யூட்டிக்கசுக்கு நற்சான்று அளித்து விட்டது! ஈராண்டுகளுக்குப்பின், கால்சீடன் நகரில் கூட்டப்பட்ட பொதுச் சங்கத்தில் 600 ஆயர்கள் கலந்து கொண்ட போது புனித ஃபிளேவியன் குற்றமற்றவர் என மெய்ப்பிக்கப்பட்டது.

இந்த முடிவை ஏற்றுக்கொண்ட ஆயர்கள் “சிங்கராயர் மூலம் பேதுரு பேசிவிட்டார்.” என்று தங்களின் ஒரு மனதான  ஒப்புதலைத் தெரிவித்தனர். அன்று கிறிஸ்து வில் உள்ள 2 தன்மைகளும் இவ்வாறு தெளிவுபடுத்தப் பட்டன. இன்றுவரை கத்தோலிக்கத் திருச்சபையின் போதனையாக இது இருந்து வருகிறது என்பது தெய்வச் செயலே.

அடுத்த அறைகூலவாக திருத்தந்தை லியோவுக்கு அமைந்தது அற்றிலாவின் தலைமையில் ஹ{னர்கள் உரோமை நகரை நோக்கிப் படையெடுத்தது. அதை ஒருவிதமாகச் சமாளித்ததற்குப் பிறகு 3 ஆண்டுகள் கழித்து ஜென்செரிக் உரோமையைச் சூறையாடி ஏராள மான விலையேற்றப்பற்ற பொருள்களைக் கொள்ளை யடித்துக் கொண்டு போய்விட்டான். இறைவனின் பேணுதலில் ஆழமான நம்பிக்கை வைத்திருந்தார். லியோ என்பது இச்சூழலைச் சமாளித்த விதத்திலிருந்து தெளிவாகிறது. திருச்சபையை வழிநடத்திய 21 ஆண்டு காலத்தில் அனைவருடைய நன்மதிப்பையும் அவர் பெற்றிருந்தார்.

வேளாங்கன்னியின் திருவுருவம் திறந்து வைக்கப்பட்டது.

கடந்த மாத நடுப்பகுதி யில் வவுனியா வேப்பங் குளம் பங்கின் எல்லைக் குள் அமையும் உக்கிளான் குளம் என்னும் இடத்தில் நிறுவப்பட்டிருந்த, பல ஆண்டுகள் வரலாற் றைக் கொண்ட தூய அன்னை வேளாங் கன்னியின் திருவுவம் இனந் தெரியாதோரல் சேதமாக்கப்பட்டிருந்தது.

மேலும் அறிய வேளாங்கன்னியின் திருவுருவம் திறந்து வைக்கப்பட்டது.

லாத்தரன் பேராலய

இப்பேராலயம் மன்னன் கொன்ஸ்தான்தைன் என்பவ ரால் எழுப்பப்பட்டது. மன்னருக்குத் திருத்தந்தை சில்வெஸ்டர் திருமுழுக்குக் கொடுத்த அதே இடத்தில் இவ்வாலயத்தைக் கட்டி எழுப்பினார்கள். ஏறத்தாழ ஓரா யிரம் ஆண்டுகளாகத் திருத்தந்தையர்கள் இவ்வாலயத்தி ற்கு அருகில் தங்கினார்கள். அவிஞான் நகருக்குச் சென்று திருத்தந்தையர்கள் தங்கிய நாள் முதல், இவ்வாலயத் தின் தீயினால் பாதிக்கப்பட்டது. இப்போது உள்ள இதே பெயர் கொண்ட பேராலயம் கி.பி. 16-வது 17-வது நூற்றாண்டுகளில் முழுமையடைந்தது.

உலகிலுள்ள ஆலயங்களுக்கெல்லாம் தாய் ஆலயமாக இப்பேராலயம் காலங்காலமாகக் கருதப்படுகிறது. காரணம், இது திருத்தந்தைக்கே உரிய பேராலயம். கி.பி. 4-ம் நூற்றாண்டு முதல் 16-ம் நூற்றாண்டு வரை இப் பேராலயம் 5 பொதுச்சங்கங்கள் நடைபெற்றுள்ளன. 20 ஆயர் பேரவைகளும் நடைபெற்றுள்ளன. 12-ஆம் நூற்றாண்டு முதல் “மீட்பரின் பேராலயம்” என்று அழைக்கப்பட்ட பெயர் மாறி இப்போது புனித திருமுழுக்கு யோவான் பெயராலும், இப்பேராலயம் அழைக்கப்படுகிறது.

இங்குதான் புனித பேதுரு, பவுல் இவர்களின் தலைகள் வெள்ளிப் பாதத்ரங்களில் புனிதமாக வைக்கப்பட்டுள் ளன. மேலும் புடென்ஸ் என்பவரின் இல்லத்தில் புனித பேதுரு திருப்பலி நிகழ்த்தப் பயன்படுத்திய இரா உணவின் போது, ஆண்டவர் பயன்படுத்திய புனித மேசையும் இங்குதான் வைக்கப்பட்டுள்ளது.