Category Archives: இன்றைய தூயவர்

ஜனவரி:17 புனித வனத்து அந்தோனியார்

ஜனவரி:17
புனித வனத்து அந்தோனியார் மடத்துத் தலைவர்(கி.பி251-356)

எகிப்து நாட்டைச் சார்ந்த இத் தவமுனிவரே கிறிஸ்தவ துறவு வாழ்வுக்கு வித்திட்டவர். பேற்றோரை இழந்த நிலையில் இவர் 18 வயதில் தேவ அழைத்தலை உணர்ந்தார். இவருக்கு உரிமைச் சொத்தாக இருந்த ஒரு தோட்டத்தையும் துறந்து விட்டு இயேசுவைப் பின் செல்ல உதவியாக இருந்தது என்ன தெரியுமா? இயேசுவின் திருத்தூதர்கள் அனைத்தையும் துறந்தபின், அவரைப் பின் சென்றார்கள் என்ற சொற்களே (மத் 19, 21). தம் சகோதரிக்கு மட்டும் ஒரு சிறு தொகையைக் கொடுதடது விட்டு எஞ்சியதை ஏழைகளுக்கு ஈந்தார். பின் துறவற வாழ்வை மேற்கொண்டார். தம் ஊருக்கு அருகிலேயே கடும் உழைப்பு, மறைநூலை ஊன்றிப்படித்தல், செபம் ஆகியவற்றில் நாள் தோறும் நேரத்தைச் செலவிட்டார்.

நாளடைவில் ஊரைவிட்டு மிகத் தொலைவில் உள்ள இடத்தைச் தேடிச் சென்றார். அங்கு புனித அத்தனாசியாரின் நண்பரானார். நாளடைவில் பலரும் இவரை அனுகவே ஆங்காங்கே குழுக்களாக துறவு வாழ்வு மேற்கொண்டனர். அவ்வவ்ப்போது அலெக்சாண்டிரியா நகருக்குச் சென்று அங்கு வேதகலகத்தில் சாவை எதிர்நோக்கி வாழ்ந்த மறைசாட்சிகளை விசுவாச சத்தியத்தில் உறுதிப்படுத்தினார். புனித அத்தனாசியார் இவரது துறவு வாழ்வைப் பற்றி விரிவாக எழுதியுள்ளார்.

இந்த குறிப்புக்களின் பயனாகப் பலரும் பாலை நிலத்திற்கும் காடுகளுக்கும் சென்று வாழ்நாளெல்லாம் தப செப வாழ்வு வாழ்ந்து இறைவனடி சென்றனர். இவ்வுலக வாழ்வு எத்துணை மின்னல் வேகத்தில் தோன்றி மறைகிறது. ஆனால் நித்தியம் நிலையான பேரின்பம் என்பது எத்துணை மேலானது என்று தியானிப்பது நிறையப் பலன் தருகிறது என்று இவர் கொடுத்து வந்த மறையுரை புனித அகுஸ்தீனாரை மிகவும் கவர்த்திழுத்தது. இதை அகஸ்டின் தமது சரிதையில் குறிப்பிடுகிறார். இவர் தமது 105வது வயதில் செங்கடலுக்கருகில் கி.பி 356 ஆம் ஆண்டு கோல்சீம் குன்றில் இறைவனடி சேர்ந்தார்.

 

ஜனவரி:16 முத்தி. ஜோசப் வாஸ் மறைபரப்பாளர்,

ஜனவரி:16
முத்தி. ஜோசப் வாஸ் மறைபரப்பாளர், இலங்கை(1651-1711)

இன்று இலங்கையில் கத்தோலிக்க விசுவாசம் ஓர் ஆலமரமாகக் காட்சியளிக்கிறதென்றால் அதற்கு புத்துயிர் ஊட்டிய பெருமை தந்தை ஜோசப் வாஸ் என்பவரையே முற்றிலும் சாரும். 17-வது நூற்றாண்டில் இலங்கைத் தீவில் போர்த்துக்கீசியரும் டச்சு நாட்டினரும் போட்டி போட்டுக் கொண்டு காலனி ஆதிக்கம் செலத்தி வந்தனர். போர்த்துக்கல் நாட்டினர் இலங்கையை கைப்பற்றிய அதே சமயம் கத்தோலிக்க விசுவாசத்திற்கு வித்திட்டிருந்தனர். அது முளைத்து வளரும் சமயம் டச்சு ஆதிக்கத்தினர் கால்வின் பதித்ததைப் புகுத்தி கத்தோலிக்க விசுவாசத்திற்கு ஒரு பெரும் சவாலாகத் தோன்றினர். கத்தோலிக்க விசுவாசத்தை பூண்டோடு அழித்தொழிக்க திட்டம் தீட்டிய சமயம் பார்த்து தந்தை ஜோசப் வாஸ் இலங்கையில் தனது பொற்பாதம் பதித்தார். இவர் புதிய ஆர்வத்தை ஊட்டியிருக்காவிட்டால் இலங்கையில் கத்தோலிக்க விசுவாசத்திற்குச் சமாதி கட்டப்பட்டிருக்கும்.

1651, ஏப்ரல் 21-ம் நாள் வாஸ் அடிகளார் கோவாவில் சால்செட் தீவில் பெனாலிம் என்ற இடத்தில், கிறிஸ்டோப்பர்வாஸ், மரியாதே மிராண்டாவின் 8-வது பிள்ளையாகப் பார்ப்பனர் குலத்தில் தோன்றினார். சிறு வயதிலிருந்தே ஜெபவாழ்விலும் ஏழைகள் மீதும் கரிசணை கொள்வதிலும் தனி ஆர்வம் காட்டியவர். கோவாவில் சேசுசபைக் கல்லூரியில் தனது படிப்புகளை முடித்துக் கொண்டு, புனித தாமஸ் அக்வீனாஸ் குருமடத்தில் சேர்ந்து படித்து தனது 25-வது வயதில் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார். கொங்கண் பகுதியில் மங்களுரிலும் அதன் சுற்றுவட்டாரங்களிலும் போர்த்துக்கீசியர் தோற்றுவித்த கத்தோலிக்க திருச்சபை நல்ல கனி தரக்கூடிய மரமாக வளர்ந்து வந்த இந்தக் காலகட்டத்தில் டச்சு நாட்டு கால்வின் பிரிவினை சபையார் கத்தோலிக்க திருச்சபையை அடியோடு அழிக்கத் திட்டம் தீட்டினார்கள். இவர்கள் மத்தியில் ஆண்டுகள் கடுமையாக உழைத்து கத்தோலிக்கர்களை ஊக்குவிக்கும் பணியில் முழுவீச்சில் இறங்கி நல்ல பலன் கிடைத்ததைப் பார்த்த பிறகு மீண்டும் கோவா சென்றடைந்தார்.
கோவாவில் இருந்த சமயம் இலங்கையிலும் டச்சு பிரிவினர் சபையார் கத்தோலிக்க விசுவாசத்தின் சவாலாகத் தோன்றினர். கத்தோலிக்கர் பல வழிகளிலும் கொடுமைப்படுத்தப்பட்டனர். சில கத்தோலிக்கர் தெரிந்தோ, தெரியாமலோ புத்த மத வழிபாடுகளிலும் பங்கேற்றனர். தனது மங்களுர் அனுபவம் தந்தை வாசுக்கு கை கொடுத்தது. தனிமையாக இலங்கைக்குப் போவதை விட ஒரு குழுவாகப் போய் கத்தோலிக்கர்களை புலிகளின் பிடியிலிருந்து மீட்க வேண்டுமெனத் திட்டம் தீட்டினர். கோவாவில் ஏற்கனவே தந்தை பாஸ்கால் டக்கோஸ்டா ஜெரமியாஸ் ஒரு வேத போதக துறவற சபையைத் தோற்றுவித்திருந்தார். அதில் தந்தை வாஸ் சேர்ந்த சில ஆண்டுகளுக்குப் பின் சபைத் தலைவரானார். நாளடைவில் இந்த சபைக்குப் புனித பிலிப்பு நேரி ஜெபக் குழுவினர் என்ற பெயரிட்டார். இந்த சபையினரைக் கொண்டு இலங்கையில் சுமார் ஒரு நூற்றாண்டு காலமாக கத்தோலிக்க விசவாசத்திற்கு உறுதுணையாகப் பணிபுரிந்தார். ஆனால் 1835-ல் கோவாவில் ஏற்ப்பட்ட கொந்தளிப்பில் மற்ற துறவற சபையைப் போல் இந்த புதிய சபையும் துர்அதிஸ்ட வசமாக கிள்ளி எறியப்பட்டு முற்றிலும் நாசப்படுத்தப்பட்டது.

இந்தச் சூழலில் இலங்கையில் திருச்சபைக்கு உறுதுணையாக இருப்பதற்காக இங்கே செல்லும் போது கூலிவேலை பார்ப்பவர் போல் மறைமுகமாகவே கப்பலேரினார். அதுவும் ஜென்ம விரோதிகளாக கருதப்பட்ட டச்சுக் கப்பலில் ஒரு பரம ஏழை போல கப்பலுக்குள் இடம் பிடித்துக் கொண்டார். கத்தோலிக்க மத போதகர்கள் எவரையும் விட்டு வைக்காமல் கொல்லத் திட்டம் தீட்டிய டச்சுக்காரரின் கப்பலுக்குள் மாறவேடத்தில் இடம் பிடித்து இலங்கைத் தீவை அடைந்ததில் இறைவனின் சிறப்பான பராமரிப்பு இருந்ததை தந்தை வாஸ் நன்கு உணர்ந்திருந்தார். இவ்வாறு முதலில் 1687-ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் காலடிகளைப் பதித்தார். சீத்தாழை என்ற கத்தோலிக்க கிராமத்தில் 3 ஆண்டுகள் தங்கி அங்கிருந்து பல இடங்களுக்கும் சென்று மேய்ப்புப் பணியை மேற்கொண்டார். கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களையும் கவர்ந்து கொள்ளும் முறைகளைக் கையாண்டார். நொறுங்குண்டு கிடந்த கத்தோலிக்க சமுதாயம் தெம்பு அடைந்தது.

இவர் இவ்வாறு மாறுவேடத்தில் பணியாற்றுவதை ஓரளவு டச்சு நாட்டினர் உணர்ந்தாலும் ஆடுகளை மந்தைக்குள் கொண்டு வந்து சேர்த்தார். எத்தகைய வலை விரித்தாலும் இவரைப் பிடிக்க இயலவில்லை.

1690-ல் கண்டி நகரில் சேசுசபையைத் சேர்ந்த பழமை வாய்ந்த ஆலயத்தைக் கண்டு பிடித்ததுடன் அதைச்சுற்றிலும் வாழ்ந்து வந்த கத்தோலிக்க சமுதாயத்தையும் கண்டு பிடித்தார். இதனருகில் பற்பல சிற்றாலயங்களை எழுப்பினார். ஆங்காங்கே இருந்த கிறிஸ்தவர்களைக் கவனிக்க வேதியர்களை உருவாக்கினார். இவர் ஒருமுறை இவ்விடங்களைப்பார்த்து வர மாட்டு வண்டியில் பயணித்த போது இவரை வேவு பார்ப்பவன் என்று எண்ணி சிறையில் தள்ளப்பட்டார். இவரைச்சார்ந்த 7பேர் தூக்கிலிடப்பட்டனர். வாஸ் அடிகளாரோ 4 ஆண்டுகள் சிறையில் தள்ளப்பட்டிருந்தார். இறுதியில் இவர் எந்த விதத்திலும் வேவு பார்ப்பவரல்லர் உன்று உணர்ந்த குறுமன்னன் இவரை விடுதலை செய்ததோடு கத்தோலிக்கர் மத்தியில் பணியாற்றவும் உத்தரவளித்தார். அரசனே, வாஸ் அடிகளார் தனக்கு உதவியாக வேறு ஒரு குருவையும் அழைத்துக் கொள்ள பரிந்துரைத்ததின் பேரில், கோவாவிலிருந்து தந்தை சல்டானா என்பவரையும் சேர்த்துக் கொண்டார்.
இக்காலத்தில் ஒரு சமயம் கடுமையான வறட்சி தலைவிரித்தாடியது. புத்தபிக்குகள் என்னென்ன மந்திரமெல்லாம் ஓதிப்பார்த்தும் பயனில்லை. அதன் பின்னர் தந்தை வாஸ் பொது இடம் ஒன்றில் திருச்சிலுவையை நட்டு பெருங்கூட்டத்தினர் முன்னிலையில் மண்டியிட்டு பக்தி பரவசத்துடன் ஜெபித்தார். மிகவிரைவில் கார்மேகம் எங்கும் கிளம்பி கனத்த மழை பெய்தது. அதிலும் இன்னுமோர் புதுமை என்னவெனில், தந்தை வாஸ் ஜெபித்துக் கொண்டிருந்த இடத்தைச் சுற்றிபற்றாக்குறைக்கு, யானைகள், காட்டுமாடுகள் இன்னும் பலவிதமான காட்டு விலங்குகளின் ஒரு சொட்டு மழை விழவில்லை. மன்னன் இதைக் கேள்வியுற்று தனது அரசின் எந்த ஒரு பகுதிக்கும் சுதந்திரமாகச் சென்று செயல்பட உத்தரவளித்தான்.

1697-ல் கண்டி நகரில் பிளேக் நோய்க்கும் பெரிய அம்மைக்கும் ஏராளமானோர் பலியானார்கள். அரசனும் அவனது தோழர்களும் தப்பித்து ஓடிவிட்ட சமயம் தந்தை வாஸ் அஞ்சா நெஞ்சத்துடன் நோயுற்றவர்களுக்குத் தேவைப்பட்ட அனைத்துச் சேவைகளையும் ஆற்றினார். பின்னர் திருகோணமலை, நெகம்போ, கொழும்பு, மட்டக்களப்பு முதலிய நகரங்களுக்கும் சென்று மக்களை விசுவாசத்தில் திடப்படுத்தினார். இருப்பினும் செல்லும் இடமெல்லாம் கால்வின் பதித்தவர்கள் இவரைப் பதம் பார்க்கத்தான் செய்தனர். பற்றாக்குறைக்கு, யானைகள், காட்டுமாடுகள் இன்னும் பலவிதமான காட்டு விலங்குகளின் ஆபத்தும் இவருக்கு நிறையவே இரு;தது.
டச்சு நாட்டு வெறியர்கள் இவரைப் பிடிக்க இயலாத சூழ்நிலையில் ஏழைக்கத்தோலிக்கர் மீது குறிவைத்தனர். அவர்களின் காது, மூக்கைக் கூட துண்டித்தனர். சிறையில் தள்ளினர். ஊரைவிட்டுத் துரத்தினர். ஒருமறை திருப்பலிக்காக கூடி வந்த 300 ஏழைக் கிறிஸ்தவர்கள் மீது புலிபோல் பாய்ந்து சித்திரவதை செய்தனர். இருப்பினும் குறுமன்னர்கள் எப்போதுமே தந்தை வாஸ் பக்கம் இருந்து, மேலும் பல குருக்களைக் கொண்டு வருவதற்கு வாய்பளித்தனர். சுமார் 11 பேர் இவ்வாறு வந்து சேர்ந்தனர். இவர்களின் ஆன்ம தாகத்தைச் சொல்லி மாளாது. இவரது சிம்ம மனத்துடன் கூடிய ஆன்ம தாகத்தை நேரடியாகப் பார்த்தவர் திருத்தந்தையின் பிரதி நிதியாக முழுஅதிகாரத்துடன் வந்த கருதினால் டூர்னோன் தந்தை வாசுக்கு ஆயர் பதவி காத்துக்கொண்டு இருந்ததை அறிவித்தார். இப்பதவியை வேண்டாம் என்று உதறி விட்டார். எப்படியோ தந்தையின் அரவணைப்பில் கோவாவில் இருந்து வந்த ஏனைய குருக்களின் அயராத உழைப்பினால் 1710ல் கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை 55000 ஆக உயர்ந்திருந்தது.
இறுதியில் தந்தை வாஸ் திருகோணமலைக்கும் மட்டக்களப்புக்கும் ஊடே இருந்த கோட்டை ஊரில் மக்களுக்கு சேவை செய்த சூழ்நிலையில் நோய்வாய்ப்பட்டார். கண்டி மருத்துவ மனைக்கு மாட்டுவண்டியில் தந்தையை ஏற்றிச்சென்றடைய 8 நாட்கள் எடுத்தன. 16.01.1711 நோய் முற்றியதை உணர்ந்ததும இறுதியாக பாவமன்னிப்பு அருட்சாதனத்தை பெற்றுக்கொண்டார். ஒரு படுக்கையை பயன்படுத்த தனக்கு தகுதியில்லை என்று சொல்லி தன்னை தரையில்போட கேட்டுக்கொண்டார். பின்னர் பாடுபட்ட சுருபத்தை ஒருகையில் பிடித்துக்கொண்டு மற்றொருகையில் எரியும் மெழுகுவர்த்தியுடன் அமைதியாக தனது ஆன்மாவை இறைவனிடம் கையளித்தார். கண்டியில் இவர் இறந்த செய்தி கேட்டு பெரும் கூட்டம் வர ஆரம்பித்தது. இதனால் மூன்று நாட்கள் உடலை நல்லடக்கம் செய்ய முடியவில்லை.

 

ஜனவரி : 13 புனித இலரி ஆயர்

ஜனவரி : 13
புனித இலரி ஆயர், மறைவல்லுனர் – (கி.பி.315-368)

 

இவர் பிரான்சு நாட்டினர். பாய்ட்டியர்ஸ் நகரின் மேதகு ஆயர். இலத்தீன் ரீதியில் திருச்சபையின் முதல் மறைவல்லுனர். மேலை நாட்டு திருச்சபைக்கு எதிராக தோன்றிய ஆரியப் பிதற்றலை சுட்டெரிக்கும் தீயாக இவர் திகழ்ந்தார்.இதனால் இவர் கீழைத்திருச்சபையைச் சார்ந்த பகுதிக்கு நாடு கடத்தப்பட்டார். அங்குதான் தூயதமதிரித்துவத்தை பற்றி அழகாக எழுதினார். இந்த நூலில் இறைமகன் இயேசுவின் தெய்வீகமும் இறைதந்தையுடன் இயல்பாக இவர் கொண்டுள்ள பிரிக்கவெண்ணாத நட்புறவும் மிளிர்கின்றன. கிரேக்க அறிவொளித் தந்தையர்களின் திருமறைப்புதயல்களை மேலைநாட்டு தந்தையர்களுக்கு அறிமுகம் செய்தவர் இவர். கீழைத்திருச்சபையில் செழிந்தோங்கிய துறவற சபைகளின் அடிப்படைகளை மேலைத்திருச்சபைக்கும் எடுத்துச் செல்ல டூர்ஸ் நகர் ஆயரான புனித மார்ட்டினுக்கு வழிகாட்டியாக அமைந்தார்.
இலத்தீன்மொழியில் எழில்மிகு திருவழிபாட்டுப் பாடல்களை தொகுத்தளித்தார். பதிதர்கள் எப்படி, பாடல் வழி மக்களை கவர்ந்நிழுக்கின்றனர். என்று சுட்டிக்காட்டி நாம் அவர்களுக்கு பின்தங்கி இருத்தல் கூடாதென்று சொல்லி பாடல்களைத் தொகுக்க ஊக்கமளித்தார். இவர் திருமணமானவர். வேற்று மறையிலிருந்து வெளியேறி திருமறையைத் தழுவியவர். வாழ்க்கையின் உண்மை இரகசியத்தை தழுவியவர். வாழ்க்கையின் உண்மை இரகசியம் எது? ஏன்ற வினா இவரது உள்ளத்தில் ஓயாமல் எழுந்தது. அதற்கு விடை காண திருமறை நூல்களைப் படித்தார். அங்கேதான் தம் வனாக்களுக்கான பொருத்தமான விடைகள் கிடைத்தன என்று குறிப்பிடுகிறார்.
இவருடைய நாள்களில் அலைக்சாண்டிரியா நகரைச் சார்ந்த ஆரியுஸ், கிறிஸ்துவிடம் தெய்வத் தன்மை இல்லை என்ற பெருந்தவற்றை விரைவாக பரப்பி வந்தான். பிரான்சிலும் இந்த தீங்கு நுழையும் நிலையிலிருந்தது. இவர் இதை வன்மையாக கண்டிக்க முயற்சி எடுத்த போது ஆரியத் தீங்கினால் ஏமாற்றப்பட்டிருந்த கொன்ஸ்டான்சியஸ் என்ற மன்னன் இலாரியாரை ஆசியா மைனரில் இருந்த பிரியாவுக்கு நாடு கடத்தி விட்டான். ஆங்கே 3 ஆண்டுகள் அகதியாயிருந்த சூழலில் தான் அவர் தம் நூல்களில் எல்லாம் இன்றுவரை மிக மேலானதாக கருதப்படும் “தூய தமத்திருத்துவம்” என்ற நூலை எழுதி வைத்தார்.
பின்னர் 359ம் ஆண்டு செலிசியாவில் நடந்த கலந்துரையாடலில் திருச்சபையின் ஆயர் பேரவையின் பெயரால் கலந்து கொள்ள அழைப்புப் பெற்று அங்கு சென்றார். அங்கிருந்து அதே ஆயர் பேரவையின் பிரதிநிதிகளில் ஒருவராக கொன்ஸ்டான்டிநோபிளுக்கு ஆரியுஸ் மன்னனின் தவறான கொள்கையை சுட்டிக்காட்ட சென்றார். மன்னன் பிடிவாதமாக தவற்றில் நிலைக்கவே இலாரியார் பிரான்ஸ் திரும்பினார். 361ல் அங்கு அவருக்கு எழுச்சிமிக்க வரவேற்ப்பு அளிக்கப்பட்டது. அங்கே 7 ஆண்டுகள் திருப்பணியாற்றிய பிறகு இறைவனடி சேர்ந்தார்.

ஜனவரி; : 07 புனித ரெய்மண்ட் பென்யபோர்ட்

ஜனவரி; : 07
புனித ரெய்மண்ட் பென்யபோர்ட் (கி.பி.1175-1275)

இவர் ஸ்பெயின் நாட்டினர். ஆரகோன் நாட்டு மன்னனின் உறவினர். பல சிறப்புக்கள் பெற்ற “திருச்சபை சட்ட வல்லுனர்”. தொமினிக்கன் துறவற சபையில் 3-வது சபைத் தலைவர். சபையில் சேருமுன் 20 வயதிலேயே தத்துவக்கலைப் பேராசிரியராகப் பார்சலோனா பல்கழைக்கழகத்தில் திகழ்ந்தார். 47 வயதில்தான் துறவற சபையில் சேர்ந்தார். பேராசிரியராக வாழ்ந்த நாள்களில் தாம் தற்பெருமை கொண்டு வாழ்ந்ததற்கு பரிகாரமாக கடுமையான தவமுயற்சிகள் செய்ய கட்;டளை தருமாறு தம் பெரியவர்களிடம் வற்புறுத்திக் கேட்டுக் கொண்டார். பல நூற்றாண்டுகளாக திருச்சபை சட்டங்கள் நூல்வடிவில் வராமல் அங்கொன்று இங்கொன்றாக இருந்தவற்றை ஒன்றாகச் சேர்த்து நூலாக வெளியிட பெரிதும் உதவினார். 1917-ம் ஆண்டுவரை பின்பற்றப்பட்ட திருச்சபை சட்ட நூலை 5 பகுதிகளாக எழுதிமுடித்தார்.

அறுபதாவது வயதில் தமது விருப்பத்திற்கு முற்றிலும் மாறாக டரகோளா நகரின் பேராயராக திருநிலைப்படுத்தப்பட்டார். நலிந்த உடல்நிலையைக் காரணம் காட்டி 2 ஆண்டுகளில் பேராயர் பதவியிலிருந்து விலகினார். மூன்று ஆண்டுகளுக்குப் பின் சபைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

தம் வாழ்வின் கடைசி 35 ஆண்டுகளில் மூர் இனத்தவர் மனம்திரும்பக் கடும் முயற்சிகளை மேற்கொண்டார். இதற்கென புனித தாமஸ் அக்வினாசை “யுபுயுஐNளுவு வுர்நு புநுNவுஐடுநுளு” என்ற நூல் எழுதத் தூண்டினார். 1256ம் ஆண்டு தமது சபைத்தலைவருக்கு எழுதிய மடல் ஒன்றில் 10,000 சரசேனியர்கள் திருமுழுக்குப் பெற்றதாக குறிப்பிடுகின்றார். இவர் சாவுப் படுக்கையில் இருந்த வேளையில் காஸ்டில் நாட்டு மன்னர் அல்போன்சும் ஆரகோன் நாட்டு மன்னர் ஜேம்சும் இவரைச் சந்தித்து இவரது கடைசி ஆசீர் பெற்றுச் சென்றனர். தமது 100வது வயதில் இதே நாளில் தமது தூய ஆன்மாவை இறைவனிடம் ஒப்படைத்தார்.

ஜனவரி:03 முத்தி.குரியாகோஸ் எலியாஸ் சவாரா

ஜனவரி:03
முத்தி.குரியாகோஸ் எலியாஸ் சவாரா குரு

கேரள நாட்டில் கைனக்கரையில் சிரோ மலபார் திருச்சபையைச்சார்ந்த கத்தோலிக்கக்குடும்பத்தில் 3வது பிள்ளையாக இவர் தோன்றினார். 24 வயதில் குருப்பட்டம் பெற்ற இவர் தந்தை தாமஸ் பலக்கல், தந்தை தாமஸ் பொருத்காரா இவர்களின் தோழமை பெற்று இன்று ஊஆஐ என்று அழைக்கப்படும் அமலமரியின் கார்மேல் சபையினர் என்ற துறவற சபை திருச்சபையின் அங்கீகாரம் பெற்ற போது இதில் உட்பட்டார்.

இந்த சபையின் முதல் மடம் மன்னானம் என்ற இடத்தில் நிறுவப்பட்டது. இவரது காலத்தில் கேரளாவில் மேலும் 5 இடங்களில் நிறுவப்பட்டது. இவர் பல குருமடங்களையும் நிறுவியுள்ளார். பள்ளி நிறுவனங்கள் முதியோர் இல்லங்கள் எழுப்பப்பட்டுள்ளன. திருநீராட்டுக்குத் தயாரிக்கப்படுவோரின் நிலையங்களும் குருக்கள் பொதுநிலையினர் ஆண்டுத் தியானங்கள் செய்வதற்கு வசதிகளும் செய்து கொடுத்துள்ளார். நல்ல மெய்யறிவு தொடர்பான நூல்களையும் மறைக் கல்விக்கான நூல்களையும் வெளியிட்ட பெருமை இவரைச் சாரும்.

தந்தை லியோபால்ட் பெக்காரோ என்ற கார்மேல் சபைத் துறவியின் உதவியுடன் ஊவுஊ என்ற கார்மேல் சபை சகோதரிகளுக்கும் ஊவுஊ என்றழைக்கப்படும் மற்றொரு தெரேசியன் கார்மேல் சபை சகோதரிகளுக்கும் மடங்களை நிறுவினார். இத்தகைய ஆன்மீகப்பணிகளின் நடுவே இவரது செப வாழ்வு மிகவும் உயர்ந்த நிலையில் இருந்தது. தாய்மரியின் மீது அளவற்ற அன்பு கொண்டிருந்தார். நோயாளிகளைச் சந்திப்பதும் அதுவும் கொடிய தொற்று நோயால் பீடிக்கப்பட்டவர்களைச் சந்திப்பதும் ஏழைகளுக்கு தகுந்த உதவி புரிவதும் இவர்களின் அன்றாட அலுவல்களில் முதலிடம் பெற்றவை.

1871ம் ஆண்டு இறந்த இவரது உடல் மன்னானம் என்ற இடத்தில் புனிதமாக வைக்கப்பட்டுள்ளது. 1986ம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் 8ம் நாள் திருத்தந்தை 2ம் ஜான் போல் இந்தியாவுக்கு வருகை தந்த போது இவருக்கு முத்திப்பேறு பெற்ற பட்டம் அளித்தார்.

புனித சில்வெஸ்டர்

டிசம்பர் 31

புனித சில்வெஸ்டர்  திருத்தந்தை (கி.பி 335)

கிறிஸ்துமஸ் வாரத்தில் இந்தத் திருநாள் அமைந்தாலும், இந்தப் பெருவிழாவுடன் இதற்குத் தனித்தொடர்பு எதுவுமில்லை. திருச்சபையில் இந்தத் திருநாள் மிக, மிகத் தொன்மை வாய்ந்தது. இந்த நாளில்தான் இந்தத் திருநாள் எனப் பல காலமாக ஒரு வழக்கம் நிலை பெற்றுவிட்டது.

இவரை நினைவுகூரும் போது, புதைகுழி வளாகத் திருச்சபையில் புதிய யுகம் தோன்றியதை உணரலாம். பேராலயங்கள் இவர் காலம் தொடங்கி ஏராளமாகக் கட்டப்பட்டன. கி.பி 325ல் நிசெயா திருச்சங்கம் வெற்றி நடைபோட்டது. இவரது காலத்தில்தான். இத்தனையையும் அரசன் கொன்ஸ்தான்தைன் மன்னனோடு ஒருங்கிணைந்து செயலாற்றியதனால் ஏற்ப்பட்ட வெற்றி. திருச்சங்கத்தில் 320 ஆயர்கள் சிறப்பாகத் கீழத்திசைத் திருச்சபையில் இருந்து கலந்துகொண்ட நிகழ்வில்தான் ஆரியுசினுடைய தப்பறைகள் கண்டனம் செய்யப்பட்டன. நீண்ட விசுவாசப் பிரமாணமும் இந்தத் திருச்சங்கத்தில் தான் தொகுக்கப்பட்டது. நீண்ட விசுவாசப்பிரமாணமும் இந்தத் திருச்சங்கத்தில் தான் தொகுக்கப்பட்டது. திருச்சபையை இவர் கண்காணித்து வந்த காலமும், முதல் கத்தோலிக்க மன்னன், முதல் கொன்ஸ்தான்டைன் காலமும் ஏக காலமாக சென்றன. வலிமை வாய்ந்த ஓர் அரசனின் கொற்றக்குடையின் திருச்சபைக்குப் பேரமைதி கிடைத்தது மடடுமல்ல: பல சலுகைகளும் கிடைத்தன. கத்தோலிக்கம்தான் நாடு தழுவிய வேதம் என்றும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

மேலம் ஞாயிற்றுக்கிழமை அரசாங்க விடுமுறையாக நடை முறைக்கு வந்தது. அரசன், ஆயர்களைத் தனக்குச் சமமானவர்களாகவும் ஆன்மீகக் காரியங்களில் முழுப் பொறுப்பு உள்ளவர்கள் என்பதையும் ஏற்றுக்கொண்ட பொற்காலம் இது.

பாப்பரசர் சில்வெஸ்டர் இறந்தபின் இவரது உடல், முதலில் புதைகுழி வளாகத்தில் புதைக்கப்பட்டதாகவும், அதன் பின்னர் உரோமை நகரில் இவரது பெயரால் எழுதப்பட்ட ஆலயத்திற்கு இவரது புனித பண்டங்கள் எடுத்துச் செல்லப்ட்டு அங்கே அவை இன்றுவரைப் பாதுகாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

ஆண்டின் இறுதி நாள் பற்றிய சிந்தனை

தேவதூதர் இருவர், ஆளுக்கொரு கூடையுடன் விண்ணினின்று இறங்கி மண்ணின் மைந்தர்களிடம் வலம் வந்தார்களாம். ஒருவர் வைத்திருந்த கூடையில் “மன்றாட்டுகள்” என்று வெளியில் எழுதப்பட்டிருந்தது. மற்றொரு கூடையில் “பெற்ற வரங்களுக்கு நன்றி” என்று எழுதப்பட்டிருந்தது.

மக்கள் மத்தியில் இவ்விண்ணவர் உலா வந்தபோது, மக்கள் தேவைப்பட்ட வரங்களைப் பெற்றுக்கொள்ள இறைவன் கிருபை புரிய வேண்டும் என்று மன்றாடி அதில் சீட்டுகள் எழுதிப்போட முதல்வரின் கூடை என்பதை உணர்ந்த மக்கள், அவசர அவசரமாக மன்றாட்டுக்களை எழுதி அக்கூடையில் திணித்தார்கள்.

இறுதியில் இந்த இரண்டு விண்ணவரும், விண்ணகத்திற்குப் புறப்பட்டுந் செல்லும்போது, முதல் கூடை நிரம்பி வழிந்தது. 2வது கூடையில் சீட்டுக்கள் அடிமட்டத்தில் இருந்தன. முதல் விண்ணவர் ஆச்சரியமடைந்து, என்ன இது, என் கூடை நொடிப் பொழுதுக்குள் நிரம்பிவிட்டது. ஏன் உங்கள் கூடையில் “நன்றி” என்ற சீட்டுக்கள் அத்திபூத்தாற்போல் இருக்கின்றன” என்று கேள்வி எழுப்பினாராம்.

அதற்கு 2வது விண்ணவர், மக்களுக்கு மன்றாட்டுக்களைக் கேட்டுப் பெற்றுக்கொள்ளத் தெரிகிறது. அவற்றைக் கொடுத்து உதவிய எல்லாம் வல்லவருக்கு நன்றி சொல்ல நாவு இல்லையே” என்று ஆதங்கத்துடன் கூறிக்கொண்டிருக்க இருவரும் விண்ணகத்துக்கள் நுழைந்தனராம்.

இது எந்த ஆண்டில் எந்த இடத்தில் நடந்தது என்று கேட்டுவடக் கூடாது. நமக்கு மன்றாட்டுக்களை இறைவன்பால எழுப்பும் அளவுக்கு, அவற்றைப் பெற்றுக்கொண்டதற்கு, வாழ்நாளெல்லாம் நன்றி மனப்பான்மையோடு வாழத் தெரிவதில்லை.

“நன்றி நன்றி, இயேசுவே, நன்றி என்றும் நன்றி உமக்கு, கோடி நன்றி பாடினாலும் இன்னும் பாடி மகிழ்வேன் நான்” என்று அமரர் யேசு சபைத் தந்தை ஜி. அம்புரோஸ் அடிகளாரின் பாடலைத் தினமும் அடிக்கடி பாடி நமது நன்றி உணர்வை வெளிப்படுத்தலாமே.

வறட்சியைத் தணிக்க மழை கொட்டுகிறது. இது ஆண்டவரின் வரப்பிரசாதம் என்று நம்மில் எத்தனை பேர் உணர்ந்து நன்றி கூறுகிறோம். பயணம் இனிதே முடிந்து, ஆபத்தின்றி திரும்பிவரும்போது “நன்றி இறiவா” என்கின்றோமா?

இன்று ஆண்டின் கடைசி நாள் இதன் அர்த்தத்தைச் சரியாகப் புரிந்திருந்தால், இன்று நாம், நம் குடும்ப சிதமாக ஆண்டவர் முன் தெண்டனிட்டு நள்ளிரவு முதல் விடியும் வரை நன்றிக் கீதம் பாடுவோம். அந்த அளவுக்கும் நம் நன்றி மனப்பான்மை விரியுமா? “மற்ற 9 பேர் எங்கே?” என்ற கேள்வி எழுப்பிய ஆண்டவர், நன்றிகெட்ட தனத்தை எப்படி உணர்ந்தார் என்பதை மீண்டும் மீண்டும் நினைவுகூர வேண்டும்.

“ஆண்டவரின் இரக்க செயல்களை நினைத்து, என்றென்றும் பாடி மகிழ்வேன்” என்ற திருப்பாடலை இன்று முழுவதும் சொல்லிக்கொண்டே இருப்போம் (சங்கீதம் 89, 1).

ஆயர், மறைசாட்சி

டிசம்பர் 29

ஆயர், மறைசாட்சி – (கி.பி 1119 – 1170)

இலண்டனில் ஒரு வணிகரின் குடும்பத்தில் தாமஸ் பிறந்தார். சொந்த நகரிலும் பாரிசிலும் பயின்றார். இளவரசனின் தோழர், தோழனே, அரசன் 2ம் ஹென்றியான பிறகு அரசவையில் துணைவேந்தராக உயர்வு பெற்றார். கி.பி. 1162ம் ஆண்டு கான்டர்பரி பேராயரானார். அப்போது முதல், திருச்சபையின் நிர்வாகத்தில் அரசனுக்கு இடமே இல்லை என்ற கொள்கையை நிலைநாட்டினார். கோயிலின் சொத்துக்களை மன்னன் தொடக்கூடாது என்றார். அதனால் சிறையிலிட்டு, நாடு கடத்தவும் பட்டார். இறந்தபின் 3 ஆண்டுகளில் இவருக்குப் புனிதப் பட்டம் அளிக்கப்பட்டது. இவரது கல்லறை, புகழ் வாய்ந்த திருத்தலமாகவும் மாறியது. இவரைக் கொல்லச் சதி செய்த அரசனே இவரது கல்லறைக்குத் திருப்பயணமாக வந்து பரிகாரம் செய்தான்!

பேராயராக நியமனம் பெற்றதும் துணைவேந்தர் பதவியை வேண்டாமெனத் தள்ளிவிட்டார். ஹென்றி அரசன் மீண்டும் மீண்டும் ஆலயக் கடமைகளில் தலையிடத் தொடங்கவே, வாக்குவாதம் முற்றியது. பிரான்சுக்குப் பொய்விட்டார்.

மீண்டும் அழைக்கப்பட்டு திரும்பி வந்தார். இந்நிலையில் ஒரு முறை அரசன் “இந்த தொல்லை பிடித்த குருவை ஒழித்துக்கட்ட யாருமில்லையா?” என்று முழங்கினான். இதைக் கேட்ட படை அலவலன் ஒருவன் கோயிலில் திருப்பலி நிறைவேற்றிக் கொண்டிருந்த தாமசை வெட்டி வீழ்த்தினான். இவர் கொல்லப்பட்டு இரத்த வெள்ளத்தில் வெட்டுண்ட மரமாகக் கிடந்தபோது இவர் பயன்படுத்திய முள் ஒட்டியாணம், முன்பு இருந்தே இவரது உடலைக் குத்திக் கொண்டிருந்த நிலையில் பிரித்தெடுக்கப்பட்டது.

“இயேசுவின் பெயரைக் கறித்தும், திருச்சபையின் பாதுகாப்பை முன்னிட்டும் நான் சாவைப் பெற்றுக்கொள்கிறேன்.” ஆயரின் பணிப்பொறுப்பை ஏற்கும் முன்னால் இவர் கூறினார். “ஹெர்பர்ட்! இது முதல் உமது வேலை என்னவெனில், மக்கள் என்னைப் பற்றி என்ன குறை கூறுகிறார்கள் என்பதைக் கெட்டு என்னிடம் சொல்ல வேண்டும். நநுPரும் என்pனடம் குற்றம் கண்டுபிடித்தால் இதையும் என்னிடம் கூற வேண்டும். ஏனெனில் இனிமேல் மக்கள் என்னிடம் கூறமாட்டார்கள். ஆனால் என்னைப்பற்றிக் கூறுவார்கள்.” தம்மையே திருத்திக்கொள்வதற்காகத் தாழ்ச்சியினால் இவ்வாறு இப்புனிதர் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

மாசற்ற குழந்தைகள் விழா

டிசம்பர் 28

மாசற்ற குழந்தைகள் விழா

ஏரோது மன்னன் பெத்லேகமுக்கு அருகில் 2 வயதும் அதற்குட்பட்டதுமான ஆண் குழந்தைகளை வாளுக்கு இரையாக்கிய அரக்கச் செயலை இந்நாள் நினைவுகூர்கின்றது. இது மத்தேயு நற்செய்தியில் 2வது அதிகாரத்தில் கூறப்படுகிறது. இக்குழங்தைகள் மாசுமறுவற்றவர்கள். இவர்களே கிறிஸ்துவுக்காகச் செந்நீர் சிந்திய முதல் மறைசாட்சிகள். ஏன், அவருக்குப் பதிலாக இவர்கள் இறந்தார்கள். “வான் வீட்டில் அரும்புகள் மலர்ந்தன” என்கிறார் புனித அகுஸ்தின்.

“அன்னையர் அழுது புலம்புகின்றனர். குழந்தைகளைப் புதைக்கும் தந்தையர்கள் கதறுகின்றனர். ஏரோதுவே, நீயோ ஈகை இரக்கமற்றவனாகிவிட்டாய். குழந’தைகளின் பேரிரைச்சலைக் கேட்டும் கூட நீ பின்வாங்கவில்லையே! ஏன் இந்தப் பச்சிளங்குழந்தைகளைக் கொன்றாய் எனில் அச்சம் உன்னைக் கnhல்லுகிறது. வாழ்வின் ஊற்றையே அழிக்க முயன்றாய். வாழ்வின் ஊற்று குழந்தையாகத் தொழுவத்தில் கிடந்தாலும், அவர் உலகம்; கொள்ள இயலாதவர். நீ அறியாத முறையில் தமது திட்டத்தை நிறைவேற்றுகிறார். இக்குழந்தைகள் புரிந்துகொள்ளாவிடினும், கிறிஸ்துவுக்காக மாண்டனர்.

பேச இயலாத பச்சிளங்குழந்தைகளைக் குழந்தை இயேசு தமக்கேற்ற சாட்சினளாக ஆக்கிக் கொள்கிறார். விடுதலை அளிக்க வந்தவர், விடுவிக்கத் தொடங்கிவிட்டார். மீட்பர் மீட்பைத் தருகிறார். பேசத் தெரியாத குழந்தைகள், ஆனாலும் கிறிஸ்துவைப் பறைசாற்றுகின்றனர். “அரியணையில் வீற்றிருப்பவர் முன், அடிபணிந்து, என்றென்றும் வாழ்கின்ற அவரைத் தொழுகின்றனர்.” (திருவெளி 4, 10).

 

 

புனித யோவான்

டிசம்பர் 27

புனித யோவான்  திருத்தூதர், நற்செய்தியாளர்

இவர்தான் “இயேசுவினால் அன்பு செய்யப்பட்ட சீடர்.” இடியின் மக்களில்” ஒருவர். இவரே இயேசுவின் மார்பில் சாய்ந்துகொண்டு, “ஆண்டவரே, நீர் சொல்வது யாரை?” என்று கேட்டவர். தலைமைக் குருவுக்கு அறிமுகமானவர். ஆதலால், இயேசுவைப் பகைவர் பிடித்துச் சென்றபொழுது தம் தலைவரின் நிலை காண தலைமைக் குருவின் மாளிகை முற்றத்தில் நுழைந்தவர் இவரே. “அன்பே கடவுள்” என்றவரும் இவரே. சிலுவையின் கீழே நின்ற ஒரே ஒரு திருத்தூதர் இவரே. இவரிடத்தில் தான் தம் தாயை இயேசு ஒப்படைத்தார்.

“தொடக்கம் முதல் இருந்ததை நாங்கள் கேட்டதை, கண்;ணால் பார்த்தை, உங்களுக்கு அறிவிக்கின்றோம். அதை நாங்கள் நோக்கிகோம். கையால் தொட்டுணர்ந்தோம். நாங்கள் அறிவிப்பது உயிரின் வார்த்தை பற்றியது. அந்த உயிர் வெளிப்படுத்தப்பட்டது. (1 அரு : 1:1)

பேதுரு, யோவான் ஆகிய 2 திருத்த}தர்களில் மண்ணகத் திருச்சபை விண்ணகத் திருச்சபை ஆகியவற்றின் உருவங்களைப் புனித அகுஸ்தினார் கண்டு பின்வருமாறு கூறுகிறார்.

“திருச்சபையில் இரண்டு விதமான வாழ்வைக் காண முடிகிறது. இவை இரண்டும் இறைவெளிப்பாட்டின் அடிப்படையில் இறைவனால் ஏவப்பட்டவை. மண்ணகத் திருச்சபை விசுவாசத்தினால் வளர்ச்சி அடைகிறது. விண்ணகத் திருச்சபை இறைத் தரிசனத்தினால் நிலைத்து நிற்கிறது. முந்தியது திருப்பயணம், பிந்தியது துறைமுகம். இங்கு முயற்சி, அங்கு வெற்றி. இங்கே நாடு கடத்தப்பட்ட நிலை, இங்கே தீயதை விலக்கி, நன்மையில் நீடித்தல். அங்கே நன்மையில் நிலைத்து நிற்றல். இங்கு போர்க்களம். அங்கு மேலான இன்பம். இங்கே இல்லாதவர்க்கு பகிர்ந்தளித்தல். அங்கே அனைவருக்கும் அமைதி, நிறைவு, நிம்மதி. இங்கே சோதனை, அங்கே நிறையருள். இங்கே கண்ணீர் கலந்த இன்பம். அங்கே தனிப் பேரின்பம். இதை இவ்வுலக நல்வாழ்வின் பரிசாக இறைத்தந்தையிடம் இருந்து பெற்றுக்கொள்ளக் காத்து நிற்கிறோம்.

 

புனித முடியப்பர்

டிசம்பர் 26

புனித முடியப்பர்  முதல் மறைசாட்சி (கி.பி 36)

ஸ்தேபான் அருளும் ஆற்றலும் நிறைந்தவராய் மக்களிடையே மாபெரும் அருங்றிகளைச் செய்து வந்தார். அப்போது சிலர் ஸ்தேபானோடு வாதம் செய்யக் கிளம்பினர். ஆனால் அவரது ஞானத்தையும் அவர் வழியாகப் பேசிய தூய ஆவியையும் அவர்கள் எதிர்த்து நிற்க முடியவில்லை. அவரைப் பிடித்துத் தலைமைச் சங்கத்திற்கு இழுத்து வந்தனர். பொய்ச்சாட்சி கொண்டு வந்து நிறுத்தினர். சங்கத்தில் அமர்ந்திருந்தோர் அனைவரும் அவரை உற்றுநோக்கிய போது, அவரது முகம் வானதூதரின் முகத்தைப்போல் இருப்பதைக் கண்டனர். “இப்போது நீங்கள் அந்த அறத்தின் வடிவைக் காட்டிக் கொடுத்துக் கொலை செய்தீர்கள். நீங்கள் திருச்சட்டத்தைப் பெற்றிருந்தும் அதைப் பின்பற்றவில்லை” என்றார். இதைக் கேட்டவர்கள் உள்ளத்தில் சினம் பொங்க அவரைப் பார்த்துப் பற்களை நறநறவெனக் கடித்தனர்.

ஸ்தேபானோ தூய ஆவியினால் நிறைந்தவராய் வானத்தை உற்று நோக்கினார். அப்போது கடவுளின் மாட்சிமையையும் அவரது வலப்பக்கத்தில் இயேசு நிற்பதையும் கண்டு, “இதோ வானம் திறந்துள்ளதையும் மனுமகன் கடவுளின் வலப்பக்கம் நிற்பதையும் காண்கிறேன்” என்றார். அதைக் கேட்டு அவர்கள் எல்லோரும் பெருங்கூக்குரலுடன் காதை மூடிக்கொண்டனர். ஒருமிக்க அவர்மேல் பாய்ந்து அவரை நகருக்கு வெளியே தள்ளி அவரைக் கல்லால் எறியத் தொடங்கினர். சாட்சிகள் தங்கள் லோடைகளைச் சவுல் என்னம் இளைஞனிடம் ஒப்படைத்தனர். அவர்கள் கல் எறிகையில், ஸ்தேபானோ” ஆண்டவராகிய இயேசுவே, என் ஆவியை ஏற்றுக்கொள்ளும்” என்று வேண்டிக்கொண்டார். பிறகு முழங்காலிட்டு உரத்த குரலில், “ஆண்டவரே இப்பாவத்தை அவர்கள் மேல் சுமத்தாதீர்” என்று சொல்லி உயிர் துறந்தார்.