நோயிலிருந்து அனைத்து மக்களும் பாதுகாப்புப் பெற சிறப்புத் திருப்பலி

உலகமெங்கும் வேகமாகப் பரவிப் பல உயிர்களை அள்ளிச் சென்று கொண்டிருக்கும் கொரோணா என்னும் கொள்ளை நோயிலிருந்து அனைத்து மக்களும் பாதுகாப்புப் பெறவும், இந்தக்  கொள்ளை நோய் உலகிலிருந்த அகலவும் இறையருள் வேண்டி மன்னார் தோட்ட வெளியில் அமைந்துள்ள மறைசாட்சியரின் அரசி அன்னை மரியாவின் திருத்தலத்தில் நேற்றைய தினம் 26.04.2020 ஞாயிற்றுக் கிழமை மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களால் சிறப்புத் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. மேலும் அறிய நோயிலிருந்து அனைத்து மக்களும் பாதுகாப்புப் பெற சிறப்புத் திருப்பலி

பூலார் குடியிருப்பில் இறையிரக்கப் பெருவிழா.

கீளியன் குடியிருப்புப் பங்கின் கிளை ஆலயமான பூலார் குடியிருப்பு புனித பவுல் ஆலயமானது நீண்டதொரு ஆன்மிக வரலாற்றுப் பாரம்பரியத்தைக் கொண்டதாகும். பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் மன்னார்த் தீவில் இயேசுவின் திருத்தூதர்களின் பெயரில் பல ஆலயங்கள் அமைக்கப்பட்டு, அர்ப்பணிக்கப்பட்டன, இவ் ஆலயங்கள் கத்தோலிக்க மக்கள் தங்கள் இறை நம்பிக்கையை வளர்க்க வாய்ப்பாக அமைந்தன. அவ்வாறமைந்த ஆலயங்களில் ஒன்றுதான் பூலார் குடியிருப்பு புனித பவுல் ஆலயமாகும். காலக்கரைதலில்  மக்களின் இடப்பெயர்வுகள், மற்றும் வேறு காரணங்களில் இவ்வாலயத்தில வழிபாடுகள் குறைந்தன, அத்தோடு இவ்வாலயத்தின் பயன்பாடும் குறைந்தது. மேலும் அறிய பூலார் குடியிருப்பில் இறையிரக்கப் பெருவிழா.