உயிர்ப்பு ஞாயிறு.

முன்னுரை.

ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர்: என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.
அன்புமிக்க சகோதர சகோதரிகளே! இயேசுவை மூன்றாம் நாள் உயிரோடு எழுப்பிக் காட்சி அளிக் கச் செய்த நம் இறைத் தந்தையின் இனிய நாமத்தில் நல் வாழ்த்துக்கள். இன்று நாம் பெரு மகிழ் ச்சியுடன் உயிர்ப்புப் பெருவிழாத் திருப்பலியில் கலந்து கொள்கின்றோம்.
பொய்மையும், அநீதியும் நம் வாழ்வில் தடைகளாகக் குறுக்கிட்டாலும் இறுதியில் அவை ஒன்று மில்லாமல் வீழ்ந்து போகும் என்பது நம் ஆண்டவராம் இயேசுவின் உயிர்ப்பு சொல்கின்ற பாடம். பாவத்தின் மீதும், மரணத்தின் மீதும் அவர் அடைந்த உயிர்ப்பின் வெற்றி உலகம் அனைத்திற்கும் இறுதியான வெற்றி, உறுதியான வெற்றி. இயேசுவிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் அவ ரது பெயரால் பாவமன்னிப்புப் பெறுவர் என்பது இன்னுமொரு நம்பிக்கையூட்டும் செய்தியாகின்றது.
எனவே நாமும் புது வாழ்விற்கான அர்ப்பணிப்போடு, கிறிஸ்துவே நமக்கு வாழ்வு அளிப்பவர் என் னும் உண்மையை உணர்ந்தவர்களாய். இறையரசு சார்ந்தவற்றிற்கு முதன்மை கொடுத்து வாழ வரம் வேண்டி, புதிய பாஸ்காவின் புனித செம்மறியாம் இயேசுக் கிறிஸ்துவுடன் இணைந்து உயிர் ப்பின் ஒளியில் வாழ்ந்திட பெருமகிழ்ச்சியுடன் இத் திருப்பலில் பங்கு பெறுவோம்.

முதல் வாசகம்

இறந்த இயேசு உயிர்த்தெழுந்தபின்பு அவரோடு உண்டு, குடித்த நாங்களே இதற்குச் சாட்சிகள்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம். 10:34,37-43
அந்நாள்களில்
பேதரு பேசத் தொடங்கி, திருமுழுக்குப் பெறுங்கள் என்று யோவான் பறைசாற்றிய பின்பு கலிலே யாமுதல் யூதேயா முழுவதிலும் நடந்தது உங்களுக்குத் தெரியும். கடவுள் நாசரேத்து இயேசுவின் மேல் தூய ஆவியாரின் வல்லமையைப் பொழிந்தருளினார். கடவுள் அவரோடு இருந்தால் அலகை யின் கொடுமைக்கு உட்பட்டிருந்த அனைவரையும் அவர் விடுவித்து எங்கும் நன்மை செய்து கொண்டே சென்றார்.
யூதரின் நாட்டுப் புறங்களிலும் எருசலேம் நகரிலும் அவர் செய்த அனைத்திற்கும் நாங்கள் சாட்சிகள். மக்கள் அவரைச் சிலுவையில் தொங்கவைத்துக் கொன்றார்கள். ஆனால் கடவுள் அவரை மூன் றாம் நாள் உயிரோடு எழுப்பிக் காட்சி அளிக்கச் செய்தார். ஆயினும் அனைத்து மக்களுக்குமல்ல, சாட்சிகளாகக் கடவுள் முன் தேர்ந்துகொண்டவர்களுக்கு மட்டுமே, அவர் காட்சியளித்தார். இறந்த அவர் உயிர்த்தெழுந்தபின்பு அவரோடு உண்டு, குடித்த நாங்களே இதற்குச் சாட்சிகள். மேலும் வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் நடுவராகக் கடவுளால் குறிக்கப்பட்டவர் இயேசுதாம் என்று மக்களுக்குப் பறைசாற்றவும் சான்று பகரவும் அவர் எங்களுக்குக் கட்டளையிட்டார். அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் அவரது பெயரால் பாவமன்னிப்புப் பெறுவர் என்று இறைவாக்கினர் அனைவரும் அவரைக்குறித்துச் சான்று பகர்கின்றனர்; என்றார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப்பாடல் திபா: 118: 1-2,16 – 17, 22-23

பல்லவி:அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா,

ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர்: என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு. ‘என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு’ என் இஸ்ரயேல் மக்கள் சாற்றுவார்களாக!பல்லவி

ஆண்டவரது வலக்கை உயர்ந்தோங்கி உள்ளது: ஆண்டவரது வலக்கை வலிமையாய்ச் செயலாற்றியுள்ளது. நான் இறந்தொழியேன்: உயிர் வாழ்வேன்: ஆண்டவரின் செயல்களை விரித்துரைப்பேன்:பல்லவி

கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று! ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது! நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று!பல்லவி

இரண்டாம் வாசகம்.

மேலுலகு சார்ந்தவற்றை நாடுங்கள். அங்கு கிறிஸ்து அமர்ந்திருக்கிறார்.

திருத்தூதர் பவுல் கொலோசையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3:1-4

சகோதரர் சகோதரிகளே,
நீங்கள் கிறிஸ்துவோடு உயிர் பெற்று எழுந்தவாகளானால் மேலுலகு சார்ந்தவற்றை நாடுங்கள். அங்குக் கிறிஸ்து கடவுளின் வலப்பக்கத்தில் அமர்ந்திருக்கிறார். இவ்வுலகு சாhந்தவை பற்றி அல்ல, மேலுலகு சார்ந்தவை பற்றியே எண்ணுங்கள். ஏனெனில் நீங்கள் கிறிஸ்துவோடு இறந்துவிட்டீர்கள். உங்கள் வாழ்வு அவரோடு இணைந்து கடவுளிடம் மறைந்து இருக்கிறது. கிறிஸ்துவே உங்களுக்கு வாழ்வு அளிப்பவர். அவர் தோன்றும் பொழுது நீங்களும் அவரோடு மாட்சி பொருந்தியவராய்த் தோன்றுவீர்கள்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வசனம் 1கொரி 5:7-8

அல்லேலூயா, அல்லேலூயா நம் பாஸ்கா ஆடாகிய கிறிஸ்து பலியிடப்பட்டிருக்கிறார். ஆகையால் நாம் ஆண்டவரின் பாஸ்காவைக் கொண்டாடுவோமாக. அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

இயேசு இறந்து உயிர்த்தெழ வேண்டும்.
எட்டு நாள்களுக்குப் பின் இயேசு சீடர்களுக்குத் தோன்றினார்.
யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 1-9
வாரத்தின் முதல் நாளன்று விடியற் காலையில் இருள் நீங்கும் முன்பே மகதலா மரியா கல்லறைக் குச் சென்றார். கல்லறை வாயிலில் இருந்த கல் அகற்றப்பட்டிருப்பதைக் கண்டார். எனவே அவர் சீமோன் பேதுருவிடமும் இயேசு தனி அன்பு கொண்டிருந்த மற்றச் சீடரிடமும் வந்து, ;;ஆண்டவ ரைக் கல்லறையிலிருந்து யாரோ எடுத்துக் கொண்டு போய் விட்டனர்: அவரை எங்கே வைத்த னரோ, எங்களுக்குத் தெரியவில்லை! ; என்றார்.
இதைக் கேட்ட பேதுருவும் மற்றச் சீடரும் கல்லறைக்குப் புறப்பட்டனர். இருவரும் ஒருமித்து ஓடினர். மற்றச் சீடர் பேதுருவை விட விரைவாக ஓடி முதலில் கல்லறையை அடைந்தார். அவர் குனிந்து பார்த்தபோது துணிகள் கிடப்பதைக் கண்டார்: ஆனால் உள்ளே நுழையவில்லை.
அவருக்குப் பின்னாலேயே சீமோன் பேதுருவும் வந்தார். நேரே அவர் கல்லறைக்குள் நுழைந்தார். அங்குத் துணிகளையும், இயேசுவின் தலையை மூடியிருந்த துண்டையும் கண்டார். அத்துண்டு மற்றத் துணிகளோடு இல்லாமல் ஓரிடத்தில் தனியாகச் சுருட்டி வைக்கப்பட்டிருந்தது. பின்னர், கல்ல றைக்கு முதலில் வந்து சேர்ந்த மற்றச் சீடரும் உள்ளே சென்றார், கண்டார்: நம்பினார். இயேசு இற ந்து உயிர்த்தெழ வேண்டும் என்னும் மறைநூல் வாக்கை அவர்கள் அதுவரை புரிந்து கொள்ள வில்லை.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

மன்றாட்டுக்கள்.

1. வாழ்வின் ஊற்றாகிய இறைவா உம் திருமகன் இயேசுவின் உயிர்ப்பு விழாவை பெரு மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இவ்வேளையில் எங்கள் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும் ஆன்மீகத்தில் சிறந்து விளங்கவும் திருச்சபையின் விசுவாச வாழ்வில் புத்துயிர் அளிக்கும் சாட்சியங்களாக வாழ்ந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. மனித நேயத்திற்கு எதிரான அரசியல் செயல்பாடுகள் மற்றும் தீவிரவாதம் பெருகிவரும் இந் நாட்களில் உலகத் தலைவர்கள் மனித நேயம் காத்திடும் கொள்கைகளைக் கடைப்பிடித்து வாழ வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. எங்கள் சமுதாய வாழ்வில் காணும் அநீதிகளை நாங்கள் எதிர்த்துப் போராடவும் எங்கும் நீதி யும், சகோதர அன்பும் தழைத்தோங்க உழைக்கவும் மன உறுதியும், அருள் துணையும் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. உடல் நலம் இன்றித் தவிப்பவர்கள், மனநலம் குன்றித் துன்புறுவோர் இவர்களுக்கு உயிர்த்த இயேசுவின் ஆற்றலாலும், மகிமையாலும் அனைத்து உதவிகளும் நல்மனம் கொண்டவர் கள் வழியாகக் கிடைத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

சாதரண எழுத்தில் பிரதி பெற கீழுள்ள இணைப்பை அழுத்தவும்  Eastersunday2019

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *