மாந்தை லூர்து அன்னை திருத்தல விழா

அனைத்து மக்களாலும் அன்பு செய்யப்படும் மடுமாதாவின், ஆரம்ப இருப்பிடமான மாந்தைத் திருப்பதியில் அமைந்துள்ள நீண்டகால ஆன்மிகச் செழுமையும், வரலாற்றுச் சிறப்பும்மிக்கு லூர்து அன்னை திருத்தல விழா இன்று 16.02.2019 சனிக்கிழமை காலை மிகவும் பக்தி எழுச்சியோடு கொண்டாடப்பட்டது.

இன்று காலையில், விழாவிற்கு வருகை தந்திருந்த மன்னார் மறைமாவட்டக் குருமுதல்வர் அருட்பணி.அ.விக்ரர் சோசை அடிகளார்;, பங்குத்தந்தை அருட்பணி.ச.மரியதாஸ் லீயோன், மன்னார் மாவட்டச் செயலர் உயர்திரு மேகன் றாஸ் மன்றும் வன்னிப் பாரளுமன்ற உறுப்பினர்களான கௌரவ செல்வம் அடைக்கலநாதன், கௌரவ சாள்ஸ் நிர்மலநாதன், கௌரவ சிவசக்தி ஆனந்தன், மன்றும் அருட்பணியாளர்கள், துறவிகள்  ஆலயத்தின் முன்பாகச் செல்லும் மன்னார் சங்குப்பிட்டி பரதான வாயிலில் வைத்து அடம்பன்மத்திய  மகாவித்தியாலய மகழ்வொலி இசைக் குழுவினரின் வரவேற்பு இசையோடு வரவேற்கப்பட்டனர்.

தொடர்ந்து மன்னார் மறைமாவட்டக் குருமுதல்வர் அருட்பணி.அ.விக்ரர் சோசை அடிகளார் தலைமையில் திருவிழாக் கூட்டுத் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. புல அருட்பணியளர்கள், துறவிகள், இறைமக்கள், பல்துறைசார் பணியாளர்கள் இவ் விழாவில் கலநது கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *