ஜீன்:01- புனித ஜஸ்டின்

ஜீன்:01
புனித ஜஸ்டின்
தத்துவமேதை, மறைசாட்சி –(கி.பி.100-166)

இவர் சிரியாவில் கி.பி.100ம் ஆண்டில் கிரேக்க மொழி பேசும் பெற்றோருக்கு மகனானப் பிறந்தவர். சிறுவயது முதல் தத்துவ இயலை ஆழமாக கற்றுத் தேர்ந்தவர். இவரது காலத்தில் ப்ளேட்டோ போன்றவர்களைப் பின்பற்றிய தத்துவ ஞானிகளின் தோழமையில் தன்னை இணைத்துக் கொண்டார். எல்லாம் வல்ல இறைவனைப்பற்றி இந்தத் தத்துவ ஞானம் முழுமையான விளக்கம் அளிக்க இயலவில்லை என்றுணர்ந்தார். ஒருநாள் அலைக்சாண்டிரியா நகருக்கு அருகில் கடற்கரையில் நடந்து போய்க் கொண்டிருக்கின்றார். தற்செயலாக ஒரு வயது முதிர்ந்த கிறிஸ்தவரைச் சந்திக்கின்றார். அவருடன் உரையாடியதன் பயனாக விவிலியத்தில் இறைவாக்கினர்கள் எழுதியவற்றைப் படித்தார். நாளடைவில் மீட்பரின் முன்னறிவிப்பை இறைவாக்குகளிலிருந்து சரியாகப் பரிந்து கொள்கின்றார்.

கிறிஸ்தவர்கள் எத்துணை மனவலிமையுடன் கிறிஸ்துவுக்காக வேதனைகளைத் தாங்கிக் கொண்டார்கள் என உணர்ந்தார். வியப்படைந்தார். சுhவைத் தழுவினாலும் இந்த மறைசாட்சிகளிடம் காணப்பட்ட முகமலர்ச்சியும் அவரை ஆழமாகத் தொட்டது. இவர்களின் வீரச்சாவும் இவர் திருநூலை படித்ததன் பயனுமாக கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டார்.
பின்னர் தமது தத்துவ மேதைக்குரிய உடையிலேயே பயணங்களை மேற்கொண்டு உரோமையை அடைந்தார். 4 நற்செய்தியாளர்களும் எழுதியவை உண்மையானவை ஜயந்திரிபற ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியவை என்று ஆணித்தரமாக கூறுகின்றார். இவரது நாட்களில் ஞாயிறு திருவழிபாடு எவ்வாறு நடைபெற்று வந்தது என்பதையும் விவிரிவாக எழுதி வைத்துள்ளார். அனைத்திற்கும் மேலாக திவ்ய நற்கருணையில் இறைபிரசன்னத்தைப் பற்றியும் அதில் நாம் கொண்டிருக்க வேண்டிய பற்றுறுதி பற்றியும் ஆழமாக விவரிக்கின்றார்.

மேலும் முதல் ஏவை சாவைக் கொண்டு வந்தவர் மரியா வாழ்வை கொண்டு வந்தவர் என்று இவர்தான் முதன்முதலில் குறிப்பிடுகின்றார். திவ்ய நற்கருணையில் இருக்கும் இறைபிரசன்னம் பற்றி எவ்வளவு தௌ;ளத் தெளிவாக எழுதி வைத்திருக்கின்றார் என்றால் கி.பி.147ம் ஆண்டில் இதுவரை கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்பட்டது போல் இனியும் துன்புறுத்தப்படக் கூடாது என்று திருச்சபையைச் சேர்ந்த மன்னன் அன்றோனினுஸ் பயஸ் ஆணை பிறப்பித்தான். இவர் எழுதிய பல நூல்களுள் ஒன்றில் உலகில் எப்பகுதியிலும் எக்காலத்திலாகிலும் உண்மையை சுட்டிக் காட்டிய ஞானிகள் யாவரும் கிறிஸ்தவ சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்று குறிப்பிடுகின்றார். கி.பி.166ல் புனித ஜஸ்டின் எழுதிய மற்றொரு நூல் நாம் பெற்றுக்கொண்ட விசுவாச பேருண்மை பற்றி அருமையான கோட்பாடாக அமைந்துள்ளது. இந்நூல் மன்னன் மார்க்ஸ் அவுரேலியசுக்கு எரிச்சலை மூட்டியது. புனிதர் எதிர்பார்த்தபடி சிறைப்படுத்தப்பட்டார். தமது 67து ஆண்டில் தலை வெட்டப்பட்டு மறைசாட்சியாக இறந்தார். இவர்தான் கிறிஸ்தவ தத்துவக் கலைக்கு முதல் பாதுகாவலர். எந்த ஒரு தத்துவக் கலையும் இறுதியில் கிறிஸ்துவிடம் மட்டுமே கொண்டுவர இயலும் என போதித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *