மே:13 – புனித பாத்திமா மரியன்னை

மே:13
புனித பாத்திமா மரியன்னை
(1917)

போர்த்துக்கல் நாட்டில் பாத்திமா என்ற இடத்திற்கருகில் புனித மரியன்னை ஆடு மேய்க்கும் சிறுவர், சிறுமியர், பிரான்சிஸ்கோ, ஜசிந்தா, லூசியாவுக்கு 5 முறையாகிலும் காட்சி அளித்துள்ளார். முதன்முறையாக இவர்களுக்கு காட்சியளித்தது மே மாதம் 13ம் நாள் 1947ம் ஆண்டு. எனவே தான் இதே நாளில் இத்திருநாள் கொண்டாடப்படுகிறது.

இந்தச் சம்பவத்தில் இரண்டு காரியங்களை வேறுபடுத்தி சிந்திப்பது அவசியம். அருங்காட்சிகள் வேறு. மரியன்னை தரும் செய்தி வேறு. இங்கு மரியன்னை தந்ந பரிந்துரைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதற்கு தந்த காட்சிகள் என்றே கருதவேண்டும். விண்ணினிண்று இறங்கி வந்து இந்தப் பரிந்துரைகள் தரப்பட்டவை என்பதை உறுதிப்படுத்தவே மரியா பலமுறை தந்த காட்சிகள். இக்காட்சிகள் கதிரவனில் ஏற்படும் அபூர்வ அதிசய மாற்றங்கள். உலகில் எப்போதோ ஒருமுறை நடைபெறக்கூடியவை. இதன் பொருட்டு சோர்ந்திருக்கக் கூடிய நமது விசுவாசத்தை உசுப்ப வேண்டும். மூவிதப் பரிந்துரைகள்: தவமுயற்சி, செபமாலை, கன்னிமரியின் மாசற்ற இருதயத்திற்கு காட்டும் பக்தி.

இக்காட்சிகள் தோன்றிய சூழ்நிலையை புரிந்து கொள்வது அவசியம். கத்தோலிக்க விசுவாசம் ஊறிக்கிடந்த போர்த்துக்கல் நாட்டில் விசுவாச வாழ்வுக்கு எதிராக ஏற்ப்பட்ட கொந்தளிப்பு, அவலங்கள், அலங்கோலங்கள் கத்தோலிக்க நிறுவனங்களுக்கே மூடுவிழா என்று அறிவிக்கப்படாமல் தரப்பட்ட தொல்லைகள். அன்றுபோல் இன்றும் ஏன் அதற்கு மேலாக பாவ அக்கிரமங்கள் உலகின் மூலைமுடுக்கெல்லாம் சீரழித்து வருகின்ற கொடுமை. ஆண்களும் பெண்களும் வரலாறு காணாத முறையில் காம இச்சைக்கு இடங்கொடுத்து தீராத வியாதிகளால் முற்றிலும் பாதிக்கப்பட்ட நிலை. ஏற்கனவே தங்களின் ஆன்ம வாழ்வுக்கு சாவுமணி அடித்துவிட்டு உலகமீட்பரை தூக்கி எறிந்துவிட்ட பரிதாப நிலை.

மனிதச் சமுதாயம் தானே உண்டாக்கிக் கொண்ட இந்தச் சீர்கேட்டினை புரிந்து கொண்டு கடவுள் பக்கம் திரும்பினால் மட்டுமே விமோசனம் உண்டு. இவ்வாறு தான் 1942ம் ஆண்டு மிலான் நகர் கர்தினால் சூஸ்டர் அனுப்பிய ஆயரின் சுற்றுமடலில் குறிப்பிடுகிறார். பாத்திமா அன்னை அப்போது தந்த காட்சிகளையும் அப்போது கிடைக்கப்பெற்ற செய்தியினையும் வைத்து ஆராய்ந்து பார்த்து அவர் இவ்வாறு குறிப்பிடுகிறார். “பாத்திமா மரியன்னை தந்த காட்சிகளில் குறிப்பிட்ட கட்டளைகளை நிறைவேற்றினால் மட்டுமே மன அமைதியும் உலக அமைதியும் பெற்று மகிழ முடியும். ருஸ்யா மனந்திரும்ப முடியும். புதிய சகாப்தம் தோன்றவும் கத்தோலிக்க திருச்சபை வெற்றி நடைபோடவும் முடியும்.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *