புனித ஸ்தனிஸ்லாஸ் கோஸ்கா, சே.ச

புனித ஸ்தனிஸ்லாஸ் கோஸ்கா, சே.ச

இளந்துறவி – (கி.பி. 1550 – 1568)

இவர் போலாந்து நாட்டில் ராஸ்கோவ் என்ற நகரில் உயர்குலத்தில் தோன்றியவர். 1564 ஆம் ஆண்டு தம் சகோதரருடன் கல்வி கற்க வியன்னாவுக்கு அனுப்பப் பட்டார். சென்ற இடத்தில் ஒரு புராட்டஸ்டன்ட் வீட்டில் குடியிருந்தனர். ஒரு முறை இவர் கடும் காய்ச்சலால் படுத்த படுக்கையாகிவிட்டார். அந்நிலையில் தம் அண்ண னிடம் தமக்குத் திவ்விய நன்மைதர ஒரு குருவானவரை அழைத்து வருமாறு கேட்டார். பலமுறை கேட்டும் பயனில்லை. அண்ணன் எரிச்சலுடன் இவரைத் தடியால் அடித்துவிட்டு ஓடிவிட்டான்.

இந்நிலையில் புனிதர் நற்சாவுக்குப் பாதுகாவலியான புனித பார்பராவிடம் உருக்கமாக வேண்டினார். அவரது வேண்டுதல் கேட்கப்பட்டது. ஒரு நள்ளிரவு, இருள் படர்ந்திருந்த இவரது அறையில் எதிர்பாராமல் ஓர் ஒளி தோன்றியது. பார்பராவும், 2 வானதூதர்களும் தோன்றி னர். அந்த வானதூதர்களில் ஒருவர் கையில் திவ்விய நற்கருணையை ஏந்தி நின்றார். புனிதர் முழங்கால் இடடு அதனைப் பக்தியுடன் பெற்றுக்கொண்டார். உடனே நோய் நீங்கி நலமடைந்தார்.

இன்னொரு நாளும் ஒரு புதுமை நிகழ்ந்தது. மீண்டும் இவரது அறையில் ஓர் ஒளி தோன்றியது. உடனே மரியன்னை குழந்தை இயேசுவுடன் தோன்றினார். புன்முறுவலுடன் மரியன்னை சற்றே குனிந்து ஸ்தனிஸ் லாசிடம் தம் மகனைக் கொடுத்தார். தேவபாலனும் தம் கைகளால் புனிதரைத் தழுவினார். இந்த நேரத்தில் மரியன்னை புனிதரைப் புதிதாகத் தோன்றிய இயேசு சபையில் சேருமாறு கூறிவிட்டு மறைந்தார்.

தந்தையோ இதற்கு உடன்படவில்லை. எனவே புனிதர் தம் 17 வயதில் சாக்குத் துணியைத் தம்மீது போட்டுக் கொண்டு கால்நடையாக உரோமை நோக்கிப் புறப்பட் டார். முதலில் ஜெர்மணியை அடைந்து பீற்றர் கனிசியுசி டம் தம்மைச் சபையில் சேர்க்க வேண்டுமெனக் கேட்டார். ஆனால் சூழ்நிலையின் காரணமாக உரோமை செல்வதே மேல் என்று கனிசியுஸ் சொல்லிவிட்டார். அதனால் மேலும் 800 கல் தொலைவு நடந்து உரோமையை அடைந்தார். அங்கே பிரான்சிஸ் போர்ஜியா இவரைச் சபையில் சேர்த்துக்கொண்டார். 9 மாதங்களே இவர் இளந்துறவுநிலையில் இருந்தார். அதற்குள் நோயினால் தாக்கப்பட்டார்.

இவர் மரியன்னையிடம் ஆழ்ந்த பக்தி கொண்டு இருந்த வர். தம் இறப்பு அண்மையிலிருப்பதை உணர்ந்தார். அன்னையின் விண்ணேற்புப் பெருவிழாவன்று, தம் இறக்கப்போவதாகக் கூறிவந்தார். ஆகஸ்டு 14ம் நாள் நள்ளிரவில் அவரின் முகம் ஒளிர்ந்தது. அருகிலிருந்த ஒருவரிடம் “மரியன்னை கன்னியர் பலருடன் என்னை விண்ணகம் எடுத்துச் செல்ல வந்திருக்கின்றார்” என்று சொல்லிப் புன்முறுவலுடன் தம் ஆன்மாவை இறைவ னிடம் கையளித்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *