திருவிவிலியம்

திருவிவிலியம்

“Biblia” என்று கிரேக்க மொழியிலும் இலத்தீன் மொழியிலும், Bible என்று ஆங்கில மொழியிலும் குறிக்கப்படுகின்ற திருவிவிலியம் கடவுளால் வெளிப்படுத்தப்பட்ட நூல்களின் தொகுப்பாகும். திருவிவிலியம் என்பது ஒரு வரலாற்று நூலோ அல்லது ஒரு அறிவியல் நூலோ அல்ல. இது விவிலித்தில் சொல்வப்பட்டிருக்கின்ற இறை மக்களின் விசுவாச வாழ்வை உள்ளடக்கிய, பிரதிபலிக்கின்ற, விசுவாசத்தில் வாழ வழிகாட்டுகின்ற நூலாகும். இந்த விசுவாச நூலின் மையப் பொருளாக கடவுள் எவ்வாறு மனிதரை அன்புசெய்தார் என்றும் அதன் பலனாக மனிதர் எவ்வாறு கடவுளன்பிலும் பிறரன்பிலும் வாழ அழைக்கப்ட்டனர் என்பதையும் விரிவாக எடுத்துக் கூறும் நூல். சுருக்கமாக கடவுளின் மீட்புத்திட்டத்தில் மனிதர் எவ்வாறு பங்குபெற்று மீட்ப்புப் பெறலாம் என்பதை கூறும் மாண்பு மிக்க நூல்.

உலகத்திலேயே திருவிவியம் எனும் ‘பைபிள்’ தான் அதிக மொழிகளில் (சுமார் 2,100) மொழிபெயற்கப்பட்டு அச்சு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்ட 1815ஆம் ஆண்டிற்குப் பின் சுமார் 500 கோடிக்கும் மேலான பிரதிகள் அச்சடிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

திருவிவிலியமானது இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுகிறது. பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு.

பழைய ஏற்பாடானது கடவுள் எவ்வாறு இஸ்ரேயல் மக்களை அன்புசெய்து வழிநடத்தினார் என்பதையும் அதற்கு இஸ்ரேயல் மக்கள் எவ்வாறு பதிலன்பு செய்தார்கள் என்பதையும் உடன்படிக்கை, மற்றும் இறைவாக்கினர்கள் வழியாக கடவுள் மனிதருக்குத் தந்த மீட்புத் திட்டத்தையும் விளக்கிக் கூறும் நூல்களை உள்ளடக்கியது.

புதிய ஏற்பாடானது, கடவுள் எவ்வாறு இயேசு கிறிஸ்துவின் வழியாக புதிய உடன்படிக்கையை ஏற்படுத்துகிறார் என்பதையும், மீட்பர் இயேசு கிறிஸ்துவின் பல்வேறு போதனைகள், சிந்தனைகள், செயல்கள் மனிதருக்கு எவ்வாறு மீட்ப்பைக் கொண்டுவந்தன என்பதையும், புனித பவுல் எவ்வாறு ஆதி கிறிஸ்தவர்களை கிறிஸ்தவ விசுவாசத்தில் வழிநடத்தினார் என்பதையும், திருவெளிப்பாடு என்னும் நூல் வேத கலாபனை ஏற்பட்ட காலத்தில் அந்த மக்கள் புரிந்து கொள்ளக்கூடிய எண்கள், அடையாளங்கள் வழியாக அவர்களை விசுவாசத்தில் வாழ, வளர புனித யோவான் அவர்களை எவ்வாறு உற்சாகப்படுத்தினார் என்பவற்றை கூறும் நூல்களை உள்ளடக்கியது.

கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் பயன்படுத்தும் விவிலியமானது கிரேக்க மூல மொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட 46 பழைய ஏற்பாடு நூல்களைக் கொண்ட 39 ‘திருமுறை’ நூல்களையும் மற்றும் 7 இணைத் திருமுறை நூல்களையும் உள்ளடக்கியதாகும். இதில் பிரிவினைச் சபையினர், ‘திருமுறை’ நூல்கள் என்று ஏற்றுக்கொள்ளாத 7 நூல்களும் உள்அடங்கும். அவை: தோபித்து, யூதித்து, சாலமோனின் ஞானம், சீராக்கின் ஞானம், பாரூக்கு, 1,2 மக்கபேயர் மற்றும் எஸ்தர் இணைப்பு (10;4 – 16;24) தானியேல் இணைப்பு (3;24 – 90, 13-14). கத்தோலிக்கர் இந்த நூல்களை இணைத் திருமுறை நூல்களாக அழைக்கின்றனர். பிரிவினைச் சபையினர் பயன்படுத்தும் திருவிவிலியத்தில் பழைய ஏற்பாடானது எபிரேய மூல மொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட நூல்களைப் பயன்படுத்துகின்றனர். இந்த மொழிபெயர்ப்பில் மேற்கன்ட 7 நூல்களும், இணைப்புக்களும் இடம்பெறவில்லை. கத்தோலிக்கர், பிரிவினைச் சபையினர் பயன்படுத்தும் புதிய ஏற்பாட்டில் எந்தவித வேறுபாடுமின்றி 27 நூல்களை உள்ளடக்கியது.

திருவிவிலியம்

முன்னுரை :

திருவிவிலியம் (The Holy Bible) என்பது கிறிஸ்தவர்களு டைய சமய நம்பிக்கைக்கு அடிப்படையாக உள்ள புனித நூல். அதை ஒரு நூல் என்பதைவிட நூலகம் என்றே கூறி விடலாம். ஏனென்றால் விவிலியம் என்பது பல நூல் களை உள்ளடக்கிய ஒரு நூல் தொகுப்பு. “மனித மொழி யில் அமைந்த கடவுளின் வார்த்தை” என விவிலியத் தைக் கிறிஸ்தவர் போற்றுவர்.

விவிலியம் என்பதற்குக் கிறிஸ்தவ தமிழ் மரபில் “சத்திய வேதம்”, “வேதாகமம்”, “திருமறைநூல்”, “திருவிவிலியம்” என்னும் பல பெயர்கள் உண்டு.

கிறிஸ்தவர்கள் விவிலியத்தைப் “பழைய ஏற்பாடு” என்றும் “புதிய ஏற்பாடு” என்றும் இரு பெரும் பாகங் களாகப் பிரிப்பர்.

பழைய ஏற்பாட்டு நூல்கள் இயேசு கிறிஸ்துவுக்கு முற் பட்ட காலத்திலும், புதிய ஏற்பாட்டு நூல்கள் அவருக்குப் பிற்பட்ட காலத்திலும் எழுந்தன.

இன்றும்கூட, பழைய ஏற்பாட்டு ஆகமங்கள் யூத மக்க ளின் சமய நூலாக விளங்குகின்றன. அந்நூல்களில் பெரும்பான்மையானவை (39) எபிரேய மொழியிலும், ஒரு சில (7) கிரேக்க மொழியிலும் எழுதப்பட்டவை ஆகும். கிரேக்க மொழியில் எழுதப்பட்ட விவிலிய நூல் கள் எல்லா யூதராலும் அதிகாரப்பூர்வமான திருநூல் தொகுப்பில் ஏற்கப்படவில்லை. இந்த வேறுபாடு கிறிஸ்த வர்களுடைய சபைகளிலும் துலங்குகிறது. அதாவது, கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் பழைய ஏற்பாட்டின் எபிரேய மற்றும் கிரேக்க நூல்களைத் திருநூல் முறை யில் ஏற்றுக்கொண்டுள்ளனர். ஆனால், சீர்திருத்த சபை யினர் (புரோட்டஸ்டாண்டு) எபிரேய மொழியில் எழுதப் பட்ட பழைய ஏற்பாட்டு நூல்களை மட்டுமே திருநூலின் பகுதிகளாக ஏற்பர். கிரேக்க மொழியில் எழுதப்பட்ட நூல் களை அதிகாரப்பூர்வமானவையாக ஏற்பதில்லை. கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் இந்நூல்களை “இணைத் திருமுறை நூல்கள்” (Deutero-canonical) என்று அழைப்பர். சீர்திருத்த சபையினர் “விவிலியப் புற நூல்கள்” (Apocrypha) என்பர்.

புதிய ஏற்பாட்டு நூல்கள் 27ஐயும் எல்லாக் கிறிஸ்தவ சபையினரும் அதிகாரப்பூர்வமானவையாக ஏற்றுக் கொண்டுள்ளனர். இந்நூல்கள் கிரேக்க மொழியில் எழுதப்பட்டவையாகும்.

 

விவிலிய நூல்கள் உருவான வரலாறு :

இருபத்தோராம் நூற்றாண்டில் வாழ்கின்ற நாம் விவிலி யத்தைப் புரட்டும்போது அங்கே பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடுமாக பல புத்தகங்கள் வரிசையாகத் தரப்பட்டிருப் பதைப் பார்க்கலாம். இந்த நூல்கள் ஒவ்வொன்றும் ஓர் ஆசிரியரால் எழுதப்பட்டதுபோலத் தோன்றலாம். ஆனால், விவிலிய நூல்கள் அவ்வாறு தோன்றவில்லை. ஏதோ ஒரு குறிப்பிட்ட ஆண்டில் ஆசிரியர் ஒருவர் ஏட் டையும் எழுதுகோலையும் கையில் எடுத்து, தம் நூலை எழுதிவிடவில்லை. மாறாக, விவிலியத்தில் காணப்படு கின்ற ஒவ்வொரு நூலுக்கும் ஒரு வரலாறு உள்ளது. அந்த நூல்கள் ஒவ்வொன்றும் பல படிகளைத் தாண்டி வந்த பின்னரே இன்று நாம் பார்க்கின்ற வடிவத்தைப் பெற்றன.

இந்த வரலாற்றுப் படி வளர்ச்சியை நாம் மூன்று கட்டங் களில் நிகழ்ந்ததாகக் கூறலாம். அவையாவன:

  • வாய்மொழி மரபுக் கட்டம்; கடவுளைத் தங்கள் வாழ் வில் சந்தித்த அனுபவத்தை மக்கள் வாய்மொழியாகப் பகிர்ந்துகொண்டனர். தங்கள் பிள்ளைகளுக்கும், பின் வந்த தலைமுறைகளுக்கும் அந்த அனுபவக் கதை களை எடுத்துக் கூறினர். இவ்வாறு பல தலைமுறை களாக இந்தக் கூற்றுரைகள் வாய்மொழி வழியாகவே அளிக்கப்பட்டுவந்தன.

 

  • நாள் செல்லச் செல்ல, எழுத்துப் பணியில் திறமை பெற்றிருந்த எழுத்தர்கள் கடவுள் நம்பிக்கையின் அடிப்படையில் எழுந்த அக்கதைக் கூற்றுக்களை ஏடுகளில் கைப்படியாக எழுதிவைத்தனர். இவை, குறிப்பாக, மக்களின் இறைநம்பிக்கை ஆபத்துக்கு உள்ளான காலங்களில், அவர்களை ஊக்குவிக்கும் வண்ணமும், அவர்களுடைய பாரம்பரியங்களைப் பழுதறப் பாதுகாக்கும் வண்ணமும் எழுதிவைக்கப் பட்டன.

 

  • மேலும் நாள் செல்லவே, திறமை பெற்ற எழுத்தர்கள் ஏற்கெனவே புழக்கத்தில் இருந்த எழுத்துவடிவான மரபுகளைக் கோவையாக இணைத்து, தொகுதிகளாகப் பிணைத்து, பதிவு செய்தனர். அவ்வாறு செய்தபோது, அவர்கள் வாழ்ந்த சமகாலச் சூழ்நிலையையும் கருத் தில் கொண்டனர்.

 

இவ்வாறு மூன்று முக்கிய கட்டங்களைத் தாண்டி வந்த வையே விவிலிய நூல்கள் ஆகும். இவ்வாறு தொகுக்கப் பட்ட நூல்களுள் எவை எவை சமயம் சார்ந்த திருமுறை யாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்பதைச் சமயக் குழுக்கள் (யூதக் குழு; கிறிஸ்தவ திருச்சபை) அதிகாரப் பூர்வமாக ஒரு குறிப்பிட்ட காலத்தில் நிர்ணயம் செய்தன. இதையே விவிலியத் திருமுறை (டிiடிடiஉயட உயழெn) என்று அழைப்பர். இவ்வாறு நிர்ணயம் செய்யப்பட்டதற்கு அடிப்படையான அளவுகோல் அந்த விவிலிய நூல் கிறிஸ்தவ, யூத சமய நம்பிக்கையை முழுமையாகப் பிரதிபலித்ததா என்பதே. இவ்வாறு, சமய நம்பிக்கைக்கு ஒவ்வாதனவாகக் கருதப்பட்ட பல நூல்கள் விவிலியத் திருமுறையில் இடம் பெறவில்லை, அல்லது சில சம யம் இடம் பெற்றிருந்தாலும் பின்னர் திருமுறையிலிரு ந்து நீக்கப்பட்டன.

ஒரு குடும்பத்தில் நடக்கும் நிகழ்வுகளை அக்குடும்ப உறுப்பினர் ஒருவர் ஒருவரோடு, உறவினரோடு பகிர்ந்து கொள்வது இயல்பு. இவ்வாறு எழுகின்ற தொடர்உரைகள் பெற்றோரிடமிருந்து பிள்ளைகளுக்கும், பிள்ளைகளிட மிருந்து அடுத்த தலைமுறையினருக்கும் கதைபோல சொல்லப்படுவது வழக்கம். இவ்விதத்தில் ஒரு குடும் பத்தின் வரலாறு அக்குடும்பத்தைச் சேர்ந்தவர் உள்ளத் தில் ஆழப்பதிவதோடு, அவர்களுடைய வரலாறு பற்றி அவர்கள் பெருமிதம் கொள்வதற்கும் துணையாகிறது. இது ஒரு குடும்பத்துக்கு எப்படிப் பொருந்துமோ, அது போலவே விவிலியக் காலத்துக்கு மக்களுக்கும் பொரு ந்தும். அவர்களும் சமய நம்பிக்கையின் அடிப்படையில் குழுவாகக் கூடினர். எனவே, அவர்களது நம்பிக்கையி லிருந்து எழுந்த கதைகளைத் தலைமுறை தலைமுறை யாக வழங்கினர். முதலில் எழுந்தது “வாய்மொழி” வரலா ற்று மரபு என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

நான்கு முக்கிய மரபுகள்:

பழைய ஏற்பாட்டு நூல்களுக்கு அடித்தளமாக உள்ள மரபு களை, குறிப்பாக ஐந்நூல்கள் (தெடக்க நூல், விடுதலைப் பயணம், லேவியர், எண்ணிக்கை, இணைச்சட்டம்) என்று அழைக்கப்படுகின்ற முதல் ஐந்து நூல்களில் காணும் மரபுகளை விவிலிய அறிஞர் நான்கு என அடையாளம் காட்டுவர்.

இவற்றுள் காலத்தால் முந்தியது யாவே மரபு என அழைக்கப்படுகிறது. இதில் கடவுளைக் குறிக்க “யாவே” என்னும் சொல் பயன்படுத்தப்படுகிறது. தாவீது, சால மோன் போன்ற அரசர்கள் பெற்ற வெற்றிகளுக்குப் பின் எழுந்த தேசிய உணர்வு இதில் காணப்படுகிறது. நாடு தாழ்நிலை எய்திய தருணத்தில் கடவுளே இனி தங்க ளைக் காக்க வேண்டும் என மக்கள் உணர்ந்ததையும் இம்மரபில் காணலாம். இம்மரபில் வரும் கடவுள் மனிதரோடு பேசி, உறவாடுபவராகக் காட்டப்படுகிறார். படைப்பின் வரலாறு மிக்க உயிரோட்டத்தோடு விவரிக் கப்படுகிறது (தொநூ 2;4-4;16). தெற்கு நாட்டுப் பார்வை இதில் உள்ளது.

இரண்டாவது மரபு எலோகிம் மரபுஎன அறியப்படு கிறது. இதில் கடவுளைக் குறிக்க “எலோகிம்” என்னும் சொல் பயன்படுத்தப்படுகிறது. வடக்கு நாட்டுப் பார்வை இந்த மரபில் உள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த யாக்கோபு, யோசேப்பு, யோசுவா போன்றோருக்கு முக்கிய இடம் தரப்படுகிறது. மனிதரிடமிருந்து பெரிதும் அகன்று நிற் பவர் போலக் கடவுள் உருவகிக்கப்படுகிறார். கி.மு. பத் தாம் நூற்றாண்டிலிருந்து எட்டாம் நூற்றாண்டு வரை இம்மரபுகள் வாய்மொழியாகவும் எழுத்தாகவும் வழிவழி வழங்கப்பட்டன எனத் தெரிகிறது.

மூன்றாவது மரபு இணைச்சட்ட மரபுஎன அழைக்கப் படுகிறது. இது இணைச்சட்ட நுலில் பெரிதும் உள்ளது. சீனாய் மலையில் கடவுள் தம்மை வெளிப்படுத்திய நிகழ்ச்சியிலிருந்து, இஸ்ரயேலர் பயணம் சென்றதும், மோசே இறந்ததும், யோசுவா தலைமை ஏற்றதும் இதில் கூறப்படுவன. மோசே பெயரால் சட்டத் தொகுப்பு தரப்படுகிறது.

நான்காவது மரபு குருக்கள் மரபுஎன்பதாகும். கி.மு. 587இலிருந்து 538 வரை யூத மக்களில் பலர் பாபிலோ னுக்கு நாடுகடத்தப்பட்டு பெரும் இன்னலுக்கு உள்ளாயி னர். அவ்வமயம் யூத சமய மரபு முழுவதுமே அழிந்து படும் நிலைக்கு வந்துவிட்டது. அப்போது, நாடுகடத்தப் பட்டிருந்த குருக்கள் சிலர் யூத சமய சட்டங்களையும் வழிபாடு சார்ந்த முறைகளையும், பிற இனத்தாரிடமிரு ந்து யூதர்களைப் பிரித்துக்காட்டும் தனிப்பண்புள்ள நடத்தையையும் விரிவாகத் தொகுத்து எழுதினர். இதுவே “குருக்கள் மரபு” என்னும் பெயர் பெற்றது. இம்மரபின் தாக்கம் லேவியர் நூலில் மிக அதிகம். தொடக்க நூலில் காணப்படும் இன்னொரு படைப்பு வரலாறு இம்மரபின் பண்புகளைக் கொண்டுள்ளது (தொநூ 1:1-2;4அ; 2:4ஆ-25).

நாடுகடத்தப்பட்டோர் விடுதலையடைந்து வந்ததும் மேலே கூறிய நான்கு மரபுகளும் ஒன்றோடொன்று இணைந்தன. அவற்றின் தொகுப்பாக எழுந்ததே இன்று நம்மிடம் உள்ள ஐந்நூல் ஆகும்.

வாய்மொழி மரபிலிருந்து எழுத்துவடிவ மரபுக்கு வந்தது எப்போதும் சீராகத் தட்டுத்தடங்கலின்றி நிகழ்ந்தது என நாம் கூறிட இயலாது. மேலே நாம் பிரித்துக் காட்டிய மூன்று படிகளும்கூட தெளிவாக, எந்தவித குழப்பமும் இன்றி அமைந்தன என்றும் கூறுவதற்கில்லை. வெங் காயத்தை நாம் வெளிப்பகுதியிலிருந்து ஒவ்வொரு தோலாக உரித்துவிடலாம். ஆனால் விவிலிய மரபுகளை அவ்வாறு துல்லியமாகப் பிரித்துப்பார்த்திட இயலாது. ஒருவிதத்தில், மேலே கூறிய மூன்று வளர்ச்சிப் படி நிலைகளும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்கவியலா விதத்தில் பின்னிப் பிணைந்து கிடக்கின்றன எனலாம். ஒரு படி மற்றொரு படியிலே நுழைவதும் உண்டு. இதை வரைபடமாகக் காட்டினால் பின்வருமாறு தோற்ற மளிக்கும் :

கி.மு. ஆண்டு ஐந்நூல் இறைவாக்கினர் நூல்கள் இலக்கிய நூல்கள் வரலாற்று நூல்கள்
1000 “யாவே” மரபு
900 “எலோகிம் மரபு”
800

 

புராதன இறைவாக்கினர்; ஆமோஸ், ஒசேயா, எசாயா(1), மீக்கா
700 “யாவே” மரபும் “எலோகிம்” மரபும் இணைதல்;

“இணைச்சட்ட மரபு”

நாடுகடத்தப் படுமுன் வாழ்ந்த இறைவாக்கினர்; செப்பனியா, நாகூம், அபக்கூக்கு, எரேமியா
600 “குருக்கள்” மரபு நாடுகடத்தப் பட்ட காலத்து இறைவாக்கினர்; எசேக்கியேல், எசாயா (2); புலம்பல் இணைச்சட்ட வரலாறு; யோசுவா, நீதித் தலைவர்கள், 1,2 சாமுவேல், 1,2 அரசர்கள்
500 மேலே தரப்பட்ட நான்கு மரபுகளும் இணையப்பெற்று “ஐந்நூல்” உருவாதல் நாடுகடத்தப் பட்ட காலத்தின் பின்வந்த இறைவாக்கினர்; எசாயா (3), ஆகாய், செக்கரியா, மலாக்கி,ஒபதியா யோபு
400 யோவேல் யோனா, நீதிமொழிகள், திருப்பாடல்கள் 1,2 குறிப்பேடுகள், எஸ்ரா, நெகேமியா
300 சபை உரையாளர், தோபித்து
200 சீராக், எஸ்தர், தானியேல், யூதித்து, பாரூக்கு
100 சாலமோனின் ஞானம், 1,2 மக்கபேயர்

 

வாய்மொழி மரபு, எழுத்துவழி மரபுகளின் இறுதி எழுத்து வடிவம்:

மேல்கூறிய விதத்தில் வாய்மொழி மரபும் எழுத்துவழி மரபும் இறுதி எழுத்து வடிவமும் வெவ்வேறு விதத்தில் இணையவும் பிணையவும் கூடும் என்றதுமே, விவிலிய நூல்கள் தொடக்க கால மரபைத் துல்லியமாகப் பிரதி பலிக்கவில்லை என்று நாம் முடிவுசெய்தல் சரியல்ல. ஏனென்றால், விவிலிய நூல்கள் சமய நம்பிக்கையின் அடிப்படையில் உருவாகி வளர்ந்தவை. அவற்றில் காணப்படும் செய்தி சமய நம்பிக்கையை நம்மில் வளர்ப் பதற்காக அமைந்ததே தவிர, நமக்கு அறிவியல் சார்ந்த கருத்துக்களை வழங்குவதற்காகவோ வரலாற்று நிகழ்ச் சிகளை நடுநிலை நின்று விமர்சிப்பதற்காகவோ எழுதப் படவில்லை. எனவே, கடவுள் மனிதருடைய முழுநல னுக்காக எதைஎதை எல்லாம் நமக்கு வழங்க விரும் பினாரோ அது விவிலியத்தில் உள்ளது என நாம் ஏற்றுக் கொள்கிறோம். ஆகவே, ஒரு குறிப்பிட்ட காலத்தில் எழுந்த விவிலியத் தொடர்கூற்று ஒரு சில தலை முறை களுக்குப் பிறகு வேறு பொருளில் புரிந்துகொள்ளப் பட்டது என்பதற்காக அது தன் முக்கியத்துவத்தை இழந்து விடாது.

எத்தனையோ தலைமுறைகளான மக்கள் இந்த விவிலியத்திலிருந்து தங்கள் சமய நம்பிக்கை சார்ந்த ஆன்மீக வாழ்வுக்கு உந்துதல் பெற்று வந்துள்ளார்கள் என்பதே நாம் விவிலியத்தை மதித்துப் போற்றி, அதை நம் வாழ்வுக்கு வழிகாட்டியாகக் கொள்வதற்குப் போதுமான காரணம் ஆகும்.

——————–

மொழிபெயர்ப்பு

விவிலியத்தின் பண்டைக் கால மொழிபெயர்ப்புகள்:

எபிரேய மொழி பேசிய யூத மக்களிடையே எழுந்த நூல் கள் என்பதால் பழைய ஏற்பாட்டு நூல்கள் எபிரேய மொழி யிலேயே எழுதப்பட்டன. ஆனால், கி.மு. இரண்டாம் நூற் றாண்டில் யூதர்கள் சிலர் பாலஸ்தீனாவுக்கு வெளியே சென்று கிரேக்கப் பகுதிகளில் குடியேறினர். நாளடைவில் அவர்கள் தங்கள் சொந்த மொழியான எபிரேயத்தை மறந் துவிட்டதால் அம்மொழியில் இருந்த தங்கள் திரு நூலைப் படிக்க அவர்களால் இயலாமல் போயிற்று. எனவே, அவர்கள் பேசிய கிரேக்க மொழியில் விவிலியம் மொழிபெயர்க்கப்பட்டது. இந்த முதல் மொழிபெயர்ப்பு “எழுபதின்மர் விவிலியம்” (Septuagint) என்று அழைக்கப் படுகிறது. எழுபது எபிரேய அறிஞர்கள் இந்த மொழி பெயர்ப்பைச் செய்தார்கள் என்னும் மரபுவழிச் செய்தி யின் அடிப்படையில் இப்பெயர் எழுந்தது. இத்தோடு, கிரேக்க மொழியில் நேரடியாக எழுதப்பட்ட 7 நூல்களும் சேர்க்கப்பட்டன.

கிறிஸ்து பிறந்த காலத்தில் இன்று நாம் பழைய ஏற்பாடு என்று கூறுகின்ற விவிலியப் பகுதி மட்டுமே “முழு” விவிலியமாக இருந்தது. அதையே இயேசு வாசித்தார் (காண்க லூக்கா 4;16-28); தொழுகைக் கூடங்களில் வாசிக்கக் கேட்டார். இயேசு யூத ஆன்மீக நெறியில் வளர்வதற்குத் துணையாக இருந்தது இந்த விவிலியம்தான்.

இயேசுவின் போதனையைக் கேட்டு, அவர் புரிந்த அதிசய செயல்களைப் பார்த்து அனுபவித்த மக்கள், அல்லது அந்த அனுபவத்தைப் பிறர் வழி பெற்றவர்கள் அந்த அனுபவத்துக்கு எழுத்து வடிவம் கொடுத்தனர். இவ்வாறு எழுந்த நூல்களே புதிய ஏற்பாடு என்று அழைக்கப்படுகின்றன. இவை அனைத்துமே கிரேக்க மொழியில்தான் எழுதப்பட்டன. புதிய ஏற்பாட்டு நூல்களின் எண்ணிக்கை 27 ஆகும்.

பாலஸ்தீனாவைச் சூழ்ந்த பகுதிகளில் வாழ்ந்த கிறிஸ்தவ மக்கள் நடுவே கிரேக்க மொழி வழக்கத்திலிருந்தது. பின்னர் கிறிஸ்தவ சமய நம்பிக்கை உரோமைப் பேரரசின் பகுதிகளில் விரிவாகப் பரவத் தொடங்கியதும் கிரேக்க விவிலியத்தை இலத்தீன் மொழியில் பெயர்க்க வேண்டிய தேவை எழுந்தது. தூய எரோணிமுசு (St. Hieronymus; ஆங்கில வழக்கில் St. Jerome) என்பவர் கி.பி. நான்காம் நூற்றாண்டில் செய்த இலத்தீன் மொழிபெயர்ப்பு மிகப் புகழ்பெற்றது. இதை “வுல்காத்தா” (Vulgate) மொழிபெயர்ப்பு என அழைப்பர். பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பெயர்ப்பு என்பது அதன் பொருளாகும். இந்த இலத்தீன் மொழிபெயர்ப்பின் அடிப்படையில்தான் நீண்டகாலமாகக் கத்தோலிக்கத் திருச்சபையின் மொழிபெயர்ப்புக்கள் அமைந்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

பழைய மொழிகளில் விவிலியம் திருப்பப்பட்டதற்கு எடுத்துக்காட்டாக சிரிய மொழி விவிலியம் (கி.பி. 2ஆம் நூற்றாண்டு), கோப்திய மொழி விவிலியம் (கி.பி. 3ஆம் நூற்றாண்டு), எத்தியோப்பிய மொழி விவிலியம் (கி.பி. 7ஆம் நூற்றண்டு) போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

விவிலிய நூல்கள் தொடக்க காலத்தில் “எழுத்துப் படையல்கள்” (Scriptures) என்னும் பொதுப் பெயராலேயே வழங்கப்பட்டன. கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த தூய இரனேயுஸ் என்னும் லியோன் நகர ஆயர், கிறிஸ்துவைப் பற்றியும் தொடக்க காலத் திருச்சபை பற்றியும் விவிரிக்கின்ற திருநூல்களைப் “புதிய ஏற்பாடு” (New Testament) என்று அழைத்தார். “ஏற்பாடு” என்பது கடவுள் மனிதரோடு செய்துகொண்ட “உடன்படிக் கையை” (Covenant) குறிக்கும். புதிய ஏற்பாட்டுக்கு முன் அமைந்த நூல்கள் “பழைய ஏற்பாடு” (Old Testament) அல்லது பழைய உடன்படிக்கை என்னும் பெயரைப் பெற்றன. கி.பி. நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த தூய கிறிசோஸ்தோம் என்னும் காண்ஸ்தாந்திநோப்புள் ஆயர், பழைய-புதிய ஏற்பாடுகளின் தொகுப்பை “Biblia” (Bible) என்று அழைத்தார். அதுவே, இன்றைய தமிழ் மொழிபெயர்ப்பில் “விவிலியம்” என்ற பெயரைப் பெறலாயிற்று.

விவிலியம் என்னும் சொல்லுக்கு மூலமாகிய கிரேக்கச் சொல் (papyrus) என்பதாகும். பிப்ளோஸ் என்பது இன்றைய லெபனான் நாட்டிலுள்ள ஒரு துறைமுகப்பட்டினம். புத்தகம் எழுதப் பயன்படும் “பப்பைரஸ்” (papyrus) என்னும் ஒருவகை நாணல்புல் விற்கப்பட்டது அந்த பிப்ளோஸ் நகரத்தில்தான் (papyrus) என்னும் சொல்லிலிருந்தே Paper என்னும் ஆங்கிலச் சொல் பிறந்தது).

ஆக, பப்பைரஸ் விற்கப்பட்ட பிப்ளோஸ் நகரத்தின் பெயரால் Biblion என்னும் சொல் புத்தகத்தை (Book) குறிப்பதாயிற்று. “The Book” என்பது பன்மையில் Biblia என்று ஆகும். இந்தச் சொல் இலத்தீனில் ஒருமையில் பயன்படுத்தப்பட்டு, “The Book” என்னும் பொருள் தருவதாயிற்று. நூல்களில் எல்லாம் உயர்ந்த நூலாகிய விவிலியத்தை எந்த ஓர் அடைமொழியுமின்றி “நூல்” (“The Book”) என்றே அழைக்கலாமன்றோ!

(விவிலியத்தின் வரலாற்றைத் தொகுத்து வழங்கியவர் கோட்டாறு மறைமாவட்டத்தைச் சார்ந்த அருள்திரு பவுல் லியோன் வறுவேல் அவர்கள்.தற்போது அமேரிக்காவில் உள்ள பஃபலோ மறைமாவட்டத்தில் சேர்ந்து, கிறிஸ்தரசர் குருத்துவக் கல்லூரியில் இறைஇயல் பேராசிரியராகப் பணியாற்றி வருகின்றார். அவர்களுக்கு எம் உளங்கனிந்த நன்றி.)